தூத்துக்குடி: உடன்குடி அனல் மின் நிலையத்தில் தற்காலிகமாக நிறுத்தப்பட்ட மின் உற்பத்தி
தூத்துக்குடி மாவட்டத்தின் உடன்குடி பகுதியில் செயல்பட்டு வரும் அனல் மின் நிலையத்தில் மின் உற்பத்தி தற்போது தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.இந்த மின் நிலையத்தில் கடந்த மார்ச் 13-ஆம் தேதி அப்போதைய முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மின் உற்பத்தியை தொடங்கி வைத்திருந்தார்.தற்போது மின் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் நடைபெற்றுவருவதால்,முதல்அலகில்உற்பத்திசெய்யப்பட்டுவந்த660மெகாவாட்மின்சாரம்தற்காலிகமாகநிறுத்தப்பட்டுள்ளது.பராமரிப்புப் பணிகள் நிறைவடைந்ததும் மீண்டும் மின் உற்பத்தி தொடங்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.இதற்கிடையில், 2-வது அலகில் மின் உற்பத்திக்கான சோதனை ஓட்டங்களும், கூலிங் டவர் தொடர்பான சோதனைகளும் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.