Skip to main content
🌤️ —°C
வெள்ளி | 14 ஆகஸ்ட் 2026 | 29 ஆடி பராபவ வருடம்

சபரிமலை அய்யப்பன் கோவில் நடை நாளை மறுதினம் திறக்கப்படுகிறது

சபரிமலை அய்யப்பன் கோவில் நடை நாளை மறுதினம் திறக்கப்படுகிறது
உலகப் புகழ்பெற்ற கேரளாவின் சபரிமலை அய்யப்பன் கோவிலில் மாதந்தோறும் நடைபெறும் வழக்கமான பூஜைகளுக்காக கோவில் நடை திறக்கப்படும்.இந்த நிலையில், மலையாள நாட்காட்டியின் முதல் மாதமான சிங்கம் தொடங்குவதை முன்னிட்டு, சபரிமலை கோவில் நடை வரும் 16-ம் தேதி திறக்கப்பட உள்ளது. அன்று மாலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டு, சிறப்பு பூஜைகள் நடைபெறும்.அதனைத் தொடர்ந்து, 17-ம் தேதி காலை 5 மணி முதல் 21-ம் தேதி இரவு 10 மணி வரை பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்படும்.
Advertisement
பின்னர் கோவில் நடை மூடப்படும்.மேலும், ஓணம் பண்டிகையை முன்னிட்டு, கோவில் நடை மீண்டும் 24-ம் தேதி திறக்கப்படுகிறது. அதன் பிறகு, 28-ம் தேதி இரவு 10 மணிக்கு மீண்டும் நடை சாத்தப்படும் என்று சபரிமலை தேவசம்போர்டு தெரிவித்துள்ளது.பக்தர்கள் சிரமமின்றி தரிசனம் மேற்கொள்ள தேவையான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாகவும் தேவசம்போர்டு தெரிவித்துள்ளது.
மதிப்பீடு மற்றும் கருத்துகள்
இந்த செய்தி உங்களுக்கு எவ்வளவு பயனுள்ளதாக இருந்தது?
நடப்பு விலைகள்
🥇 Gold ₹13,230
🥈 Silver ₹240.00
Petrol ₹108.47
🛢️ Diesel ₹100.32
தினத்துளிர்
📰 நிருபர் ஆக
🏠 முகப்பு தமிழ்நாடு இந்தியா உலகம் சினிமா விளையாட்டு தொழில்நுட்பம் ஆன்மீகம் வேலை & கல்வி வணிகம் சுகாதாரம் வீடியோ சிறப்புக் கட்டுரைகள் 📸 பட செய்திகள்
📰 இ-பேப்பர் 🔍 தேடல் ✍️ கட்டுரை எழுது ℹ️ தகவல் மையம்
📰 செய்தி பதிவிடு