Skip to main content
🌤️ —°C
வெள்ளி | 21 ஆகஸ்ட் 2026 | 5 ஆவணி பராபவ வருடம்

குன்னூரில் செங்குத்தாக கவிழ்ந்த கார்: 3 பேர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்

குன்னூரில் செங்குத்தாக கவிழ்ந்த கார்: 3 பேர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்
நீலகிரி மாவட்டம் குன்னூர் மலைப்பாதையில் கோவிலுக்குச் சென்ற 3 பேர் பயணித்த கார், ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரத்தில் செங்குத்தாக தலைகீழாக கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் காரில் இருந்த 3 பேரும் பெரும் ஆபத்தின்றி உயிர் தப்பினர். கோவிலுக்குச் செல்வதற்காக 3 பேர் காரில் குன்னூர் மலைப்பாதை வழியாக பயணம் செய்தனர். வளைவுகள் நிறைந்த பகுதியில் கார் சென்றபோது எதிர்பாராதவிதமாக ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்தது. இதையடுத்து சாலையோரத்தில் கார் செங்குத்தாக கவிழ்ந்து நின்றது. தலைகீழாக நின்ற காரைக் கண்டு அந்த வழியாகச் சென்ற வாகன ஓட்டிகள் அதிர்ச்சியடைந்தனர்.விபத்து நடந்ததும் அப்பகுதி பொதுமக்களும், பிற வாகன ஓட்டிகளும் இணைந்து காருக்குள் சிக்கியிருந்த 3 பேரையும் பாதுகாப்பாக மீட்டனர்.
Advertisement
தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் மற்றும் மீட்புக் குழுவினர், காயமடைந்தவர்களை முதலுதவி மற்றும் சிகிச்சைக்காக குன்னூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.மலைப்பாதையின் முக்கிய வளைவில் விபத்து ஏற்பட்டதால், குன்னூர் வழித்தடத்தில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. போலீசார் விபத்தில் சிக்கிய காரை அப்புறப்படுத்தி போக்குவரத்தை சீரமைத்தனர்.மலைப்பாதைகளில் வாகனங்களை இயக்கும்போது வேகத்தைக் குறைத்து, மிகுந்த எச்சரிக்கையுடன் பயணிக்க வேண்டும் என போக்குவரத்துப் போலீசார் அறிவுறுத்தியுள்ளனர்.
மதிப்பீடு மற்றும் கருத்துகள்
இந்த செய்தி உங்களுக்கு எவ்வளவு பயனுள்ளதாக இருந்தது?
நடப்பு விலைகள்
🥇 Gold ₹13,230
🥈 Silver ₹240.00
Petrol ₹108.47
🛢️ Diesel ₹100.32
தினத்துளிர்
📰 நிருபர் ஆக
🏠 முகப்பு தமிழ்நாடு இந்தியா உலகம் சினிமா விளையாட்டு தொழில்நுட்பம் ஆன்மீகம் வேலை & கல்வி வணிகம் சுகாதாரம் வீடியோ சிறப்புக் கட்டுரைகள் 📸 பட செய்திகள்
📰 இ-பேப்பர் 🔍 தேடல் ✍️ கட்டுரை எழுது ℹ️ தகவல் மையம்
📰 செய்தி பதிவிடு