Skip to main content
🌤️ —°C
வெள்ளி | 21 ஆகஸ்ட் 2026 | 5 ஆவணி பராபவ வருடம்

ஆபரண தங்கம் விலை ஒரே நாளில் சவரனுக்கு ரூ.880 உயர்வு

ஆபரண தங்கம் விலை ஒரே நாளில் சவரனுக்கு ரூ.880 உயர்வு
சென்னை: சென்னையில் இன்று (ஆகஸ்ட் 21) 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை மீண்டும் உயர்ந்துள்ளது. சவரனுக்கு ரூ.880 அதிகரித்து, ஒரு சவரன் ரூ.1,17,680-க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல், ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ.110 உயர்ந்து ரூ.14,710-ஆக உள்ளது.சர்வதேச சந்தையில் ஏற்படும் மாற்றங்களுக்கு ஏற்ப தமிழகத்திலும் தங்கத்தின் விலையில் தொடர்ந்து ஏற்ற, இறக்கங்கள் காணப்படுகின்றன.கடந்த ஆகஸ்ட் 19-ம் தேதி ஆபரணத் தங்கம் ஒரு கிராம் ரூ.14,400-க்கும், ஒரு சவரன் ரூ.1,15,200-க்கும் விற்பனையானது. அன்றைய தினம் ஒரு கிராம் வெள்ளி ரூ.250-க்கு விற்பனை செய்யப்பட்டது.இதையடுத்து, ஆகஸ்ட் 20-ம் தேதி தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.200 உயர்ந்து ரூ.14,600-ஆகவும், சவரனுக்கு ரூ.1,600 அதிகரித்து ரூ.1,16,800-ஆகவும் விற்பனையானது.
Advertisement
வெள்ளி விலையும் கிராமுக்கு ரூ.10 உயர்ந்து ரூ.260-ஆக இருந்தது. ஒரு கிலோ வெள்ளி ரூ.10,000 அதிகரித்து ரூ.2.60 லட்சத்துக்கு விற்பனை செய்யப்பட்டது.இந்த நிலையில், இன்று தங்கத்தின் விலை சவரனுக்கு மேலும் ரூ.880 உயர்ந்துள்ளது. இதனால் ஒரு சவரன் ரூ.1,17,680-க்கும், ஒரு கிராம் ரூ.14,710-க்கும் விற்பனைசெய்யப்படுகிறது.வெள்ளியின் விலையும் இன்று அதிகரித்துள்ளது. ஒரு கிராம் வெள்ளி ரூ.5 உயர்ந்து ரூ.265-க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.5,000 அதிகரித்து ரூ.2 லட்சத்து 65 ஆயிரத்துக்கும் விற்பனை செய்யப்படுகிறது.கடந்த கால தங்கம் விலை நிலவரங்களை அறிய இங்கே கிளிக் செய்யவும்.
மதிப்பீடு மற்றும் கருத்துகள்
இந்த செய்தி உங்களுக்கு எவ்வளவு பயனுள்ளதாக இருந்தது?
நடப்பு விலைகள்
🥇 Gold ₹13,230
🥈 Silver ₹240.00
Petrol ₹108.47
🛢️ Diesel ₹100.32
தினத்துளிர்
📰 நிருபர் ஆக
🏠 முகப்பு தமிழ்நாடு இந்தியா உலகம் சினிமா விளையாட்டு தொழில்நுட்பம் ஆன்மீகம் வேலை & கல்வி வணிகம் சுகாதாரம் வீடியோ சிறப்புக் கட்டுரைகள் 📸 பட செய்திகள்
📰 இ-பேப்பர் 🔍 தேடல் ✍️ கட்டுரை எழுது ℹ️ தகவல் மையம்
📰 செய்தி பதிவிடு