அமெரிக்காவில் சிறிய ரக விமானம் விபத்து: 8 பேர் உயிரிழப்பு
வாஷிங்டன்: அமெரிக்காவின் மேற்கு அலாஸ்கா பகுதியில், தொலைதூர ரேடார் தளத்திற்கு அருகே வாடகை விமானம் விபத்துக்குள்ளானதில் அதில் பயணம் செய்த 8 பேரும் உயிரிழந்தனர்.
அமெரிக்க ராணுவம் வெளியிட்ட தகவலின்படி, 8 பேரை ஏற்றிச் சென்ற அந்த விமானம், அலாஸ்காவின் ஆங்கரேஜ் நகரில் இருந்து சுமார் 725 கிலோமீட்டர் மேற்கே அமைந்துள்ள கேப் நியூவென்ஹாம் நீண்ட தூர ரேடார் தள விமான நிலையத்தில் விபத்தில் சிக்கியது.விமானத்தில் இருந்த அனைவரும் உயிரிழந்ததாக அமெரிக்க ராணுவம் உறுதி செய்துள்ளது.
உயிரிழந்த 8 பேரின் குடும்பத்தினருக்கும் அமெரிக்க ராணுவம் இரங்கல் தெரிவித்துள்ளது.இந்த சம்பவம் குறித்து அமெரிக்க விமானப்படை லெப்டினன்ட் ஜெனரல் ராபர்ட் டேவிஸ் கூறுகையில், இது அமெரிக்க ராணுவ குடும்பத்திற்கும், ராணுவம் சேவையாற்றும் சமூகங்களுக்கும் மிகப்பெரிய இழப்பு என தெரிவித்துள்ளார்.