Skip to main content
தினத்துளிர்
TNTAM/26/A7738
🌤️ —°C
வெள்ளி | 25 செப்டம்பர் 2026 | 9 புரட்டாசி பராபவ வருடம்

வீரமணி வழக்கு தொடர்பான வீடியோ, புகைப்படங்களை வெளியிட வேண்டாம்: போலீசார் எச்சரிக்கை

வீரமணி வழக்கு தொடர்பான வீடியோ, புகைப்படங்களை வெளியிட வேண்டாம்: போலீசார் எச்சரிக்கை

சென்னை பெருநகர காவல்துறை சார்பில் விசாரிக்கப்பட்டு வரும் போக்சோ வழக்கு தொடர்பாக சிறுமியின் புகைப்படம் மற்றும் காணொளிகள் ஊடகங்கள் மற்றும் சமூக வலைதளங்களில் பகிரப்படுவதாக போலீசார் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகம் வெளியிட்டுள்ளசெய்திக்குறிப்பில், தொழில் அதிபர் வீரமணி தொடர்பான வழக்கு உள்பட போக்சோ சட்டத்தின் கீழ் வரும் குற்றங்கள் குறித்து சென்னை பெருநகர காவல்துறை விசாரணை நடத்தி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கில் தொடர்புடைய சிறுமியின் புகைப்படம் அல்லது காணொளியை பொதுவெளியில் பகிர்வது சட்டவிரோதமானது என போலீசார் எச்சரித்துள்ளனர்.

Advertisement
குறிப்பாக, சிறுமியின் புகைப்படங்களை வெளியிடுவது போக்சோ சட்டத்தின் பிரிவு 23(2)-ன் கீழ் குற்றமாகும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே, வழக்கு தொடர்பான புகைப்படங்கள், காணொளிகள் அல்லது தகவல்களை ஊடகங்கள் மற்றும் சமூக வலைதளங்களில் பகிர வேண்டாம் என காவல்துறை அறிவுறுத்தியுள்ளது. இந்த வழக்கு தொடர்பாக யாரிடமாவது ஆதாரங்கள் இருந்தால், அவற்றை சென்னை காவல்துறையிடம் ஒப்படைக்குமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

மதிப்பீடு மற்றும் கருத்துகள்
இந்த செய்தி உங்களுக்கு எவ்வளவு பயனுள்ளதாக இருந்தது?
நடப்பு விலைகள்
🥇 Gold ₹14,010
🥈 Silver ₹250.00
⛽ Petrol ₹107.76
🛢️ Diesel ₹99.55
TNTAM/26/A7738
📰 நிருபர் ஆக
🏠 முகப்பு தமிழ்நாடு அரசியல் இந்தியா உலகம் சினிமா விளையாட்டு தொழில்நுட்பம் ஆன்மீகம் வேலை & கல்வி வணிகம் சுகாதாரம் வீடியோ சிறப்புக் கட்டுரைகள்
🔍 தேடல் ✍️ கட்டுரை எழுது ℹ️ தகவல் மையம்
📰 செய்தி பதிவிடு