வீரமணி வழக்கு தொடர்பான வீடியோ, புகைப்படங்களை வெளியிட வேண்டாம்: போலீசார் எச்சரிக்கை
படம் தயாராகிறது… Generating image…
PRGI : TNTAM/26/A7738 தினத்துளிர் தமிழ் - மதுரை
Advertisement
தினத்துளிர்
தமிழ் தினசரி நாளிதழ் - www.thinathulir.com
Advertisement
25 Sep 2026, வெள்ளி | மலர் - 01 | இதழ் - 07 | பக்கங்கள்-8 | விலை - ரூ .5/- 25 Sep 2026, Friday | Vol-01 - Issue-07 | Pages 8 | Rs.5/-

வீரமணி வழக்கு தொடர்பான வீடியோ, புகைப்படங்களை வெளியிட வேண்டாம்: போலீசார் எச்சரிக்கை

வீரமணி வழக்கு தொடர்பான வீடியோ, புகைப்படங்களை வெளியிட வேண்டாம்: போலீசார் எச்சரிக்கை

சென்னை பெருநகர காவல்துறை சார்பில் விசாரிக்கப்பட்டு வரும் போக்சோ வழக்கு தொடர்பாக சிறுமியின் புகைப்படம் மற்றும் காணொளிகள் ஊடகங்கள் மற்றும் சமூக வலைதளங்களில் பகிரப்படுவதாக போலீசார் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகம் வெளியிட்டுள்ளசெய்திக்குறிப்பில், தொழில் அதிபர் வீரமணி தொடர்பான வழக்கு உள்பட போக்சோ சட்டத்தின் கீழ் வரும் குற்றங்கள் குறித்து சென்னை பெருநகர காவல்துறை விசாரணை நடத்தி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கில் தொடர்புடைய சிறுமியின் புகைப்படம் அல்லது காணொளியை பொதுவெளியில் பகிர்வது சட்டவிரோதமானது என போலீசார் எச்சரித்துள்ளனர். குறிப்பாக, சிறுமியின் புகைப்படங்களை வெளியிடுவது போக்சோ சட்டத்தின் பிரிவு 23(2)-ன் கீழ் குற்றமாகும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே, வழக்கு தொடர்பான புகைப்படங்கள், காணொளிகள் அல்லது தகவல்களை ஊடகங்கள் மற்றும் சமூக வலைதளங்களில் பகிர வேண்டாம் என காவல்துறை அறிவுறுத்தியுள்ளது. இந்த வழக்கு தொடர்பாக யாரிடமாவது ஆதாரங்கள் இருந்தால், அவற்றை சென்னை காவல்துறையிடம் ஒப்படைக்குமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.