Skip to main content
🌤️ —°C
வியாழன் | 20 ஆகஸ்ட் 2026 | 4 ஆவணி பராபவ வருடம்

வீடுகளுக்கு குழாய் மூலம் வழங்கப்படும் கியாஸ் இணைப்பை ஊக்குவிக்க வினியோகஸ்தர்களுக்கு சலுகை

வீடுகளுக்கு குழாய் மூலம் வழங்கப்படும் கியாஸ் இணைப்பை ஊக்குவிக்க வினியோகஸ்தர்களுக்கு சலுகை
வீடுகளுக்கு குழாய் வழியாக சமையல் எரிவாயு வழங்கும் திட்டத்தை விரிவுபடுத்தும் வகையில், நகர எரிவாயு வினியோகஸ்தர்களுக்கு மத்திய அரசு புதிய ஊக்கச் சலுகையை அறிவித்துள்ளது.இந்தியாவில் சமையலுக்காக பொதுமக்கள் பெரும்பாலும் எல்.பி.ஜி. எனப்படும் திரவ பெட்ரோலிய எரிவாயுவை பயன்படுத்துகின்றனர். வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் இந்த எரிவாயு, சிலிண்டர்கள் மூலம் வீடுகளுக்கு வினியோகிக்கப்படுகிறது.எல்.பி.ஜி. தேவையில் இந்தியா இறக்குமதியை அதிகம் சார்ந்திருப்பதால், புவிசார் அரசியல் பதற்றங்கள் ஏற்படும் காலங்களில் உள்நாட்டில் எரிவாயு தட்டுப்பாடு உருவாகும் சூழல் உள்ளது. சமீபத்தில் ஈரான்-அமெரிக்கா மோதலால் ஹார்முஸ் நீரிணை மூடப்பட்டபோதும் இந்தியா இதுபோன்ற பற்றாக்குறையை எதிர்கொண்டது.இதையடுத்து, வீடுகளுக்கு குழாய் மூலம் நேரடியாக எரிவாயு வழங்கும் முறையை மத்திய அரசு ஊக்குவித்து வருகிறது. இந்த திட்டத்தில் பி.என்.ஜி. எனப்படும் இயற்கை எரிவாயு குழாய் வழியாக ஒவ்வொரு வீட்டிற்கும் கொண்டு செல்லப்படுகிறது. பயன்படுத்தப்படும் அளவின் அடிப்படையில் மட்டுமே கட்டணம் வசூலிக்கப்படுகிறது.பி.என்.ஜி. பாதுகாப்பான மற்றும் தூய்மையான எரிவாயுவாக கருதப்படுவதுடன், இதன் பயன்பாடு கார்பன் உமிழ்வையும் மாசுபாட்டையும் குறைக்க உதவுகிறது.
Advertisement
இதனால், சிலிண்டர் முறையில் இருந்து குழாய் வழி எரிவாயு இணைப்புகளுக்கு அதிகளவில் மாறச் செய்வதை மத்திய அரசு நோக்கமாகக் கொண்டுள்ளது.இதன் ஒரு பகுதியாக, நகர எரிவாயு வினியோகஸ்தர்களுக்கு ஊக்கத்தொகை அடிப்படையிலான புதிய சலுகையை மத்திய பெட்ரோலிய அமைச்சகம் அறிவித்துள்ளது. அதன்படி, புதிதாக வழங்கப்படும் ஒவ்வொரு வீட்டு குழாய் எரிவாயு இணைப்புக்கும் கூடுதலாக 200 ஸ்டாண்டர்ட் கியூபிக் மீட்டர் (எஸ்.சி.எம்.) வீட்டு உபயோக இயற்கை எரிவாயு குறைந்த விலையில் வழங்கப்படும்.மத்திய அரசின் ஒப்புதலுடன் அறிவிக்கப்பட்டுள்ள இந்த சலுகை, செப்டம்பர் 1-ந்தேதி முதல் அமலுக்கு வருகிறது.ஒவ்வொரு புவியியல் பகுதிக்கும் நிர்ணயிக்கப்பட்ட வரம்பைத் தாண்டி வழங்கப்படும் கூடுதல் வீட்டு குழாய் சமையல் எரிவாயு அல்லது பி.என்.ஜி. இணைப்புகளுக்கு இந்த சலுகை பொருந்தும் என பெட்ரோலிய அமைச்சகம் தெரிவித்துள்ளது.செயல்பாட்டில் இல்லாத மற்றும் கட்டணம் வசூலிக்கப்படாத இணைப்புகளை மீண்டும் செயல்படுத்துவதுடன், பி.என்.ஜி. வினியோக வலையமைப்பை புதிய பகுதிகளுக்கும் விரிவுபடுத்துவது இந்த திட்டத்தின் முக்கிய நோக்கங்களாகும்.தற்போதைய நிலவரப்படி, இந்தியாவில் சுமார் 1.74 கோடி வீட்டு பி.என்.ஜி. இணைப்புகள் உள்ளன.
மதிப்பீடு மற்றும் கருத்துகள்
இந்த செய்தி உங்களுக்கு எவ்வளவு பயனுள்ளதாக இருந்தது?
நடப்பு விலைகள்
🥇 Gold ₹13,230
🥈 Silver ₹240.00
Petrol ₹108.47
🛢️ Diesel ₹100.32
தினத்துளிர்
📰 நிருபர் ஆக
🏠 முகப்பு தமிழ்நாடு இந்தியா உலகம் சினிமா விளையாட்டு தொழில்நுட்பம் ஆன்மீகம் வேலை & கல்வி வணிகம் சுகாதாரம் வீடியோ சிறப்புக் கட்டுரைகள் 📸 பட செய்திகள்
📰 இ-பேப்பர் 🔍 தேடல் ✍️ கட்டுரை எழுது ℹ️ தகவல் மையம்
📰 செய்தி பதிவிடு