Skip to main content
தினத்துளிர்
🌤️ —°C
சனி | 05 செப்டம்பர் 2026 | 20 ஆவணி பராபவ வருடம்

விற்பனை பிரதிநிதிகளின் வாழ்க்கையை நகைச்சுவையுடன் சொல்லும் ‘கோல்ட் கால்’

விற்பனை பிரதிநிதிகளின் வாழ்க்கையை நகைச்சுவையுடன் சொல்லும் ‘கோல்ட் கால்’

நான்கு புதுமுக நடிகர்கள் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ள ‘கோல்ட் கால்’ திரைப்படம் விரைவில் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.தமிழ் சினிமாவில் புதுமுக கலைஞர்களின் வித்தியாசமான முயற்சிகளுக்கு தொடர்ந்து வரவேற்பு கிடைத்து வருகிறது. அந்த வரிசையில், சித்து மூலி மணி, ஸ்ரீ வைஷ்ணவ், சந்தோஷ், கிருஷ்ணா விஜய் சந்திரன் ஆகிய நான்கு புதுமுகங்கள் கதாநாயகர்களாக நடித்துள்ள படம் ‘கோல்ட் கால்’.இப்படத்தில் அமிதா ரங்கநாதா, நிஷா ஹெக்டே, கீர்த்தனா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஜி.என். சரவணன் ஒளிப்பதிவு செய்ய, பிரணவ் கிரிதரன் இசையமைத்துள்ளார்.

Advertisement
தம்பிதுரை இயக்கியுள்ள இந்தப் படத்தை வாக் த்ரோ என்டர்டெயின்மென்ட் சார்பில் கேசவ மூர்த்தி தயாரித்துள்ளார். ஆக்ஷன் ரியாக்ஷன் நிறுவனம் சார்பில் ஜெனீஷ் படத்தை வெளியிடுகிறார்.படத்தின் கதைக்களம் குறித்து இயக்குநர் தம்பிதுரை கூறியதாவது: சமூகத்தில் முக்கிய பங்கு வகிக்கும் விற்பனை பிரதிநிதிகளின் அன்றாட வாழ்க்கையில் நடைபெறும் பல்வேறு சம்பவங்களை மையமாக வைத்து இப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. அந்த நிகழ்வுகளை நகைச்சுவையுடன் ரசிகர்கள் ரசிக்கும் வகையில் படமாக்கியுள்ளோம். இது பார்வையாளர்களை கவரும் என்றார்.

மதிப்பீடு மற்றும் கருத்துகள்
இந்த செய்தி உங்களுக்கு எவ்வளவு பயனுள்ளதாக இருந்தது?
நடப்பு விலைகள்
🥇 Gold ₹14,650
🥈 Silver ₹260.00
Petrol ₹108.47
🛢️ Diesel ₹100.32
தினத்துளிர்
📰 நிருபர் ஆக
🏠 முகப்பு தமிழ்நாடு அரசியல் இந்தியா உலகம் சினிமா விளையாட்டு தொழில்நுட்பம் ஆன்மீகம் வேலை & கல்வி வணிகம் சுகாதாரம் வீடியோ சிறப்புக் கட்டுரைகள்
🔍 தேடல் ✍️ கட்டுரை எழுது ℹ️ தகவல் மையம்
📰 செய்தி பதிவிடு