Skip to main content
தினத்துளிர்
TNTAM/26/A7738
🌤️ —°C
வியாழன் | 17 செப்டம்பர் 2026 | 1 புரட்டாசி பராபவ வருடம்

விநாயகர் சிலையுடன் கச்சத்தீவுக்கு செல்ல முயன்ற 10 பேர் கைது

விநாயகர் சிலையுடன் கச்சத்தீவுக்கு செல்ல முயன்ற 10 பேர் கைது

பாரதிய இந்து மக்கள் கட்சியின் நிறுவனத் தலைவர் தர்மா, சில நாட்களுக்கு முன்பு விநாயகர் சிலையுடன் திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்துக்குச் சென்று மனு அளித்திருந்தார். அதில், கச்சத்தீவை தமிழக அரசு மீட்க வேண்டும் என்றும், விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு கச்சத்தீவில் விநாயகர் சிலையை வைத்து வழிபாடு நடத்த அனுமதிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியிருந்தார். இந்த நிலையில், திண்டுக்கல் பாரதிபுரத்தில் இருந்து கச்சத்தீவுக்கு செல்லப்போவதாக பாரதிய இந்து மக்கள் கட்சியினர் நேற்று அறிவித்தனர்.

Advertisement
இதையடுத்து, தர்மா தலைமையில் கட்சியினர் கச்சத்தீவில் விநாயகர் வழிபாடு நடத்துவதற்காக 3 அடி உயர விநாயகர் சிலை மற்றும் பாரத மாதா உருவப்படத்துடன் புறப்பட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த திண்டுக்கல் தெற்கு போலீசார் உடனடியாக அங்கு சென்று அவர்களை தடுத்து நிறுத்தினர். கச்சத்தீவுக்கு செல்ல முயன்றதாக தர்மா உள்ளிட்ட 10 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும், அவர்கள் எடுத்துச் சென்ற விநாயகர் சிலையையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.

மதிப்பீடு மற்றும் கருத்துகள்
இந்த செய்தி உங்களுக்கு எவ்வளவு பயனுள்ளதாக இருந்தது?
நடப்பு விலைகள்
🥇 Gold ₹14,650
🥈 Silver ₹260.00
Petrol ₹108.47
🛢️ Diesel ₹100.32
TNTAM/26/A7738
📰 நிருபர் ஆக
🏠 முகப்பு தமிழ்நாடு அரசியல் இந்தியா உலகம் சினிமா விளையாட்டு தொழில்நுட்பம் ஆன்மீகம் வேலை & கல்வி வணிகம் சுகாதாரம் வீடியோ சிறப்புக் கட்டுரைகள்
🔍 தேடல் ✍️ கட்டுரை எழுது ℹ️ தகவல் மையம்
📰 செய்தி பதிவிடு