Skip to main content
தினத்துளிர்
🌤️ —°C
வெள்ளி | 04 செப்டம்பர் 2026 | 19 ஆவணி பராபவ வருடம்

விண்வெளிக்கு அனுப்பப்பட்ட காடை முட்டைகளில் குறைபாடுகள்: நாசா சோதனையில் அதிர்ச்சி தகவல்

விண்வெளிக்கு அனுப்பப்பட்ட காடை முட்டைகளில் குறைபாடுகள்: நாசா சோதனையில் அதிர்ச்சி தகவல்

விண்வெளியில் ஈர்ப்புவிசை இல்லாத நிலையில் உயிரினங்களின் கருக்கள் எவ்வாறு வளர்கின்றன என்பதை அறிய நாசா மேற்கொண்ட ஆய்வில் அதிர்ச்சியளிக்கும் தகவல்கள் வெளியாகியுள்ளன. விண்வெளிக்கு அனுப்பப்பட்ட கருவுற்ற ஜப்பானிய காடை முட்டைகளை ஆய்வு செய்ததில், பூமியில் வளர்ந்த கருக்களுடன் ஒப்பிடும்போது விண்வெளியில் வளர்ந்த கருக்களில் அசாதாரண மாற்றங்கள் மற்றும் உடல் குறைபாடுகள் 4 மடங்கு அதிகமாக இருந்தது தெரியவந்துள்ளது.உயிரினங்கள் விண்வெளியில் இயல்பாக இனப்பெருக்கம் செய்ய முடியுமா, ஈர்ப்புவிசை இல்லாத சூழலிலும் கருக்கள் தடையின்றி வளருமா என்பதைக் கண்டறியும் நோக்கில் இந்த சோதனை நடத்தப்பட்டது. 1995-ம் ஆண்டு நாசா மற்றும் ரஷியா இணைந்து மேற்கொண்ட விண்வெளித் திட்டத்தின் ஒரு பகுதியாக இந்த ஆய்வு நடைபெற்றது. இதற்காக 30 கருவுற்ற ஜப்பானிய காடை முட்டைகள் தேர்வு செய்யப்பட்டு, ரஷியாவின் ‘மிர்’ விண்வெளி நிலையத்துக்கு அனுப்பப்பட்டன.நாசா விண்வெளி வீராங்கனை ஷானன் லூசிட் விண்வெளி நிலையத்துக்குச் சென்றபோது, இந்த முட்டைகளையும் எடுத்துச் சென்று அங்கிருந்த அடைகாப்பானில் வைத்தார்.

Advertisement
16 நாட்கள் கழித்து, அவற்றின் கருக்களை பூமிக்கு கொண்டு வந்து ஆய்வு செய்யும் வகையில் பாதுகாப்பாக பதப்படுத்தினார். மைக்ரோகிராவிட்டி எனப்படும் மிகக் குறைந்த ஈர்ப்புவிசை சூழலில் வளர்ந்த இந்த கருக்கள் பின்னர் மேலதிக ஆய்வுகளுக்காக பூமிக்கு கொண்டு வரப்பட்டன.விஞ்ஞானிகள் மேற்கொண்ட விரிவான ஆய்வில், ஈர்ப்புவிசை இல்லாத விண்வெளிச் சூழல் கருக்களின் வளர்ச்சியில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தியிருப்பது தெரியவந்தது. பூமியில் வளர்க்கப்பட்ட முட்டைகளின் கருக்களுடன் ஒப்பிடும்போது, விண்வெளியில் வளர்ந்த காடை கருக்களில் மரபணுமற்றும்உடல்தொடர்பானகுறைபாடுகள்4மடங்குஅதிகமாககண்டறியப்பட்டன.உயிரினங்களின் ஆரம்பக்கட்ட உடல் வளர்ச்சியில் ஈர்ப்புவிசை இல்லாத சூழல் தீவிரமான தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் என்பதை இந்த ஆய்வு வெளிப்படுத்தியுள்ளது. எதிர்காலத்தில் மனிதர்கள் நீண்ட காலம் விண்வெளியில் தங்கி வாழ்வது மற்றும் அங்கு புதிய தங்குமிடங்களை உருவாக்குவது தொடர்பான ஆய்வுகளுக்கு இதுபோன்ற சோதனைகள் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகின்றன.

மதிப்பீடு மற்றும் கருத்துகள்
இந்த செய்தி உங்களுக்கு எவ்வளவு பயனுள்ளதாக இருந்தது?
நடப்பு விலைகள்
🥇 Gold ₹14,650
🥈 Silver ₹260.00
Petrol ₹108.47
🛢️ Diesel ₹100.32
தினத்துளிர்
📰 நிருபர் ஆக
🏠 முகப்பு தமிழ்நாடு அரசியல் இந்தியா உலகம் சினிமா விளையாட்டு தொழில்நுட்பம் ஆன்மீகம் வேலை & கல்வி வணிகம் சுகாதாரம் வீடியோ சிறப்புக் கட்டுரைகள்
🔍 தேடல் ✍️ கட்டுரை எழுது ℹ️ தகவல் மையம்
📰 செய்தி பதிவிடு