Skip to main content
தினத்துளிர்
TNTAM/26/A7738
🌤️ —°C
சனி | 03 அக்டோபர் 2026 | 17 புரட்டாசி பராபவ வருடம்

வார விடுமுறை; கொடைக்கானலில் குவியும் சுற்றுலா பயணிகள் - போக்குவரத்து நெரிசலால் வாகன ஓட்டிகள் அவதி

வார விடுமுறை; கொடைக்கானலில் குவியும் சுற்றுலா பயணிகள் - போக்குவரத்து நெரிசலால் வாகன ஓட்டிகள் அவதி

கொடைக்கானல்: ‘மலைகளின் இளவரசி’ என அழைக்கப்படும் கொடைக்கானலுக்கு தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், கேரளா உள்ளிட்ட அண்டை மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்தும் சுற்றுலா பயணிகள் தொடர்ந்து வருகை தருகின்றனர். தமிழகத்தின் சில பகுதிகளில் மழை பெய்து வந்தாலும், பல இடங்களில் வெயிலின் தாக்கம் நீடித்து வருகிறது. இதனால் குடும்பத்துடன் மலைப்பகுதிகளுக்கு சென்று நேரத்தை செலவிட மக்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். இந்நிலையில், வார விடுமுறையையொட்டி தமிழகம் மற்றும் கேரளாவின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் இன்று கொடைக்கானலுக்கு வந்துள்ளனர். மேலும், தமிழகத்தில் பள்ளிகளுக்கு காலாண்டு விடுமுறை விடப்பட்டுள்ளதுடன், காந்தி ஜெயந்தியை முன்னிட்டு தொடர் விடுமுறையும் இருப்பதால் கொடைக்கானலுக்கு வருகை தரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

Advertisement
இதன் காரணமாக கொடைக்கானலுக்குச் செல்லும் மலைச்சாலைகளில் வாகனப் போக்குவரத்து அதிகரித்து கடும் நெரிசல் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக, கொடைக்கானலின் நுழைவுப் பகுதியான வெள்ளி நீர்வீழ்ச்சி முதல் நகரப்பகுதி வரை சுமார் 7 கிலோமீட்டர் தொலைவுக்கு வாகனங்கள் நீண்ட வரிசையில் அணிவகுத்து மெதுவாக நகரும் நிலை காணப்படுகிறது. இதனால் சுற்றுலா பயணிகளும் வாகன ஓட்டிகளும் கடும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர். இந்த நிலையில், கொடைக்கானலில் போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்தும் வகையில் சாலைகளை அகலப்படுத்தவும், சாலையோர ஆக்கிரமிப்புகளை அகற்றவும் மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கைகள் எழுந்துள்ளன.

மதிப்பீடு மற்றும் கருத்துகள்
இந்த செய்தி உங்களுக்கு எவ்வளவு பயனுள்ளதாக இருந்தது?
நடப்பு விலைகள்
🥇 Gold ₹13,675
🥈 Silver ₹245.00
⛽ Petrol ₹107.76
🛢️ Diesel ₹99.55
TNTAM/26/A7738
📰 நிருபர் ஆக
🏠 முகப்பு தமிழ்நாடு அரசியல் இந்தியா உலகம் சினிமா விளையாட்டு தொழில்நுட்பம் ஆன்மீகம் வேலை & கல்வி வணிகம் சுகாதாரம் வீடியோ சிறப்புக் கட்டுரைகள்
🔍 தேடல் ✍️ கட்டுரை எழுது ℹ️ தகவல் மையம்
📰 செய்தி பதிவிடு