Skip to main content
தினத்துளிர்
TNTAM/26/A7738
🌤️ —°C
சனி | 03 அக்டோபர் 2026 | 17 புரட்டாசி பராபவ வருடம்

தாராபுரம் பிரசாரத்தில் மு.க.ஸ்டாலின் மற்றவர்களின் உடல்நிலை பற்றி பேசியது கண்டிக்கத்தக்கது: சவுமியா அன்புமணி

தாராபுரம் பிரசாரத்தில் மு.க.ஸ்டாலின் மற்றவர்களின் உடல்நிலை பற்றி பேசியது கண்டிக்கத்தக்கது: சவுமியா அன்புமணி

தாராபுரம் இடைத்தேர்தல் பிரசாரத்தின்போது முன்னாள் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், பிறரின் உடல்நிலை குறித்து பேசியது கண்டிக்கத்தக்கது என்று பா.ம.க. எம்.எல்.ஏ. சவுமியா அன்புமணி தெரிவித்துள்ளார். யாருடைய உடல் அமைப்பையும் வைத்து கேலி செய்வதை தவிர்க்க வேண்டும் என்றும் அவர் கூறினார். பா.ம.க. தலைவர் அன்புமணியின் மனைவியும், எம்.எல்.ஏ.வுமான சவுமியா அன்புமணி பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக விமானம் மூலம் தூத்துக்குடி வந்தார். வாகைகுளம் விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: தூத்துக்குடியில் இன்று நடைபெறும் நிகழ்ச்சிகளிலும், நாளை திருநெல்வேலியிலும், நாளை மறுநாள் நாகர்கோவிலிலும் நடைபெறும் நிகழ்ச்சிகளிலும் பங்கேற்க வந்துள்ளேன். தாமிரபரணி ஆற்றில் கழிவுகள் கலப்பதாக தொடர்ந்து புகார்கள் வந்துள்ளதால், நாளை நேரில் சென்று ஆய்வு செய்ய உள்ளேன். இதுதொடர்பாக அன்புமணி ஏற்கனவே ‘தாமிரபரணி காப்போம்’ என்ற நடைப்பயணத்தின் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தியுள்ளார். சட்டப்பேரவையிலும் தாமிரபரணியில் கழிவுநீர் கலப்பது தொடர்பான பிரச்சினையை நான் எழுப்பியுள்ளேன். தமிழகத்தின் பல்வேறு ஆறுகளில் கழிவுகள் கலக்கப்படும் நிலையில், தாமிரபரணியும் அதற்கு விதிவிலக்காக இல்லை. கழிவுகள் எந்த வழியில் ஆற்றில் கலக்கின்றன, அதனை எவ்வாறு தடுக்கலாம் என்பது குறித்து நேரில் ஆய்வு செய்ய உள்ளேன். தூத்துக்குடி மீளவிட்டான் பகுதியில் புதிதாக மதுக்கடை அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் தொடர்ந்து 7-வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

Advertisement
அந்தப் பகுதியில் பள்ளிகள், வழிபாட்டுத் தலங்கள் உள்ளிட்டவை இருப்பதுடன், பொதுமக்கள் நடமாட்டமும் அதிகமாக உள்ளது. எனவே, அங்கு மதுக்கடை திறக்கப்பட்டால் மக்கள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள். போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பொதுமக்களுக்கு பாட்டாளி மக்கள் கட்சி தொடர்ந்து ஆதரவாக இருக்கும். சென்னையில் நேற்று ‘மதுவில்லா தமிழகம்’ விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. மதுவால் 54 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இரண்டு தலைமுறைகள் மதுவுக்கு அடிமையாகியுள்ள நிலையில், குறைந்தபட்சம் மூன்றாவது தலைமுறையையாவது மதுவில்லாத தமிழகத்தில் ஒழுக்கத்துடன் வளர்க்க வேண்டும். தாராபுரம் இடைத்தேர்தல் பிரசாரத்தில் முன்னாள் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறரது உடல்நிலை குறித்து பேசியது கண்டிக்கத்தக்கது. யாரையும் உடல் ரீதியாக கேலி செய்யக்கூடாது. தமிழக வெற்றிக் கழக ஆட்சி அமைந்து 100 நாட்களே ஆகியுள்ள நிலையில், மதுக்கடைகளை மூடியது மற்றும் பெண்களின் பாதுகாப்புக்காக ‘சிங்கப்பெண் படை’ திட்டம் உள்ளிட்ட நடவடிக்கைகளை வரவேற்கிறேன். மேலும், 10,000 காவல் அதிகாரிகள் நியமிக்கப்படுவார்கள் என்ற அறிவிப்பும் வரவேற்கத்தக்கது. சட்டம் ஒழுங்கை பாதுகாக்கும் வகையில் காலியாக உள்ள காவலர் பணியிடங்களை விரைந்து நிரப்ப வேண்டும். அதேபோல், உள்ளூர் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைப்பதை உறுதி செய்யும் வகையில், தொழிற்சாலைகளில் 75 சதவீத வேலைவாய்ப்பை உள்ளூர் இளைஞர்களுக்கே வழங்க வேண்டும் என்ற தேர்தல் வாக்குறுதியை சட்டமாக்க வேண்டும் என அரசை கேட்டுக்கொள்கிறேன்.

மதிப்பீடு மற்றும் கருத்துகள்
இந்த செய்தி உங்களுக்கு எவ்வளவு பயனுள்ளதாக இருந்தது?
நடப்பு விலைகள்
🥇 Gold ₹13,675
🥈 Silver ₹245.00
⛽ Petrol ₹107.76
🛢️ Diesel ₹99.55
TNTAM/26/A7738
📰 நிருபர் ஆக
🏠 முகப்பு தமிழ்நாடு அரசியல் இந்தியா உலகம் சினிமா விளையாட்டு தொழில்நுட்பம் ஆன்மீகம் வேலை & கல்வி வணிகம் சுகாதாரம் வீடியோ சிறப்புக் கட்டுரைகள்
🔍 தேடல் ✍️ கட்டுரை எழுது ℹ️ தகவல் மையம்
📰 செய்தி பதிவிடு