வ.உ.சிதம்பரனாரின் வீரத்தையும் தியாகத்தையும் போற்றி வணங்கிடுவோம்: டிடிவி தினகரன்
‘கப்பலோட்டிய தமிழன்’ வ.உ.சிதம்பரனாரின் பிறந்தநாளை முன்னிட்டு, அவரது தியாகத்தையும் தேசப்பற்றையும் நினைவுகூர்ந்து அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் மரியாதை செலுத்தியுள்ளார்.இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில், ஆங்கிலேயர்களின் அடக்குமுறை மற்றும் பொருளாதார ஆதிக்கத்திற்கு அஞ்சாமல், இந்தியாவின் சுதந்திரத்திற்காக தனது வாழ்நாளையே அர்ப்பணித்தவர் வ.உ.சிதம்பரனார் என குறிப்பிட்டுள்ளார்.மேலும், வழக்கறிஞர், எழுத்தாளர், பேச்சாளர் மற்றும் தொழிற்சங்கத் தலைவர் என பல்வேறு துறைகளில் செயல்பட்ட அவர், தனது உணர்வுப்பூர்வமான பேச்சுகள் மூலம் மக்களிடம் விடுதலை உணர்வை ஏற்படுத்தியதாக டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.வ.உ.சிதம்பரனாரின் துணிச்சலையும் தியாகத்தையும் எப்போதும் நினைவுகூர்ந்து போற்ற வேண்டும் என்றும் அவர் தனது பதிவில் தெரிவித்துள்ளார்.