சரியான கேள்விகளைக் கேட்கும் தலைமுறையை உருவாக்குவதே ஆசிரியர்களின் பெரும் பணி - மு.க.ஸ்டாலின் வாழ்த்து
முன்னாள் குடியரசுத் தலைவர் சர்வபள்ளி ராதாகிருஷ்ணனின் பிறந்தநாளான செப்டம்பர் 5ஆம் தேதி ஆண்டுதோறும் ஆசிரியர் தினமாகக் கடைப்பிடிக்கப்படுகிறது. இதையொட்டி, திமுக தலைவரும் முன்னாள் முதல்-அமைச்சருமான மு.க.ஸ்டாலின் ஆசிரியர்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.அவர் வெளியிட்டுள்ள பதிவில், ஒவ்வொரு மாணவருக்குள்ளும் ஒளிந்திருக்கும் எதிர்கால வாய்ப்புகளை கண்டறிந்து, அவர்களை சிறந்த மனிதர்களாக உருவாக்கும் ஆசிரியர்களுக்கு தனது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.மேலும், உடனுக்குடன் பதில்களை வழங்கும் செயற்கை நுண்ணறிவு காலத்தில், தகவல்களை அப்படியே ஏற்றுக்கொள்ளாமல் அவற்றை பகுத்தறிந்து, சரியான கேள்விகளை எழுப்பும் தலைமுறையை உருவாக்குவது ஆசிரியர்களின் முக்கியப் பொறுப்பாக மாறியுள்ளது எனக் குறிப்பிட்டுள்ளார்.அறிவின் மூலம் முன்னேறி, பகுத்தறிவுடன் தெளிவு பெற்று, மனிதநேயத்தின் அடிப்படையில் ஒன்றிணைந்த சமூகத்தை உருவாக்க ஆசிரியர் தினத்தில் உறுதியேற்போம் என்றும் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.