Skip to main content
தினத்துளிர்
TNTAM/26/A7738
🌤️ —°C
வெள்ளி | 25 செப்டம்பர் 2026 | 9 புரட்டாசி பராபவ வருடம்

லஞ்சம் கேட்டதால் விரக்தி: போலீஸ் நிலையத்தில் இளைஞர் தற்கொலை முயற்சி

லஞ்சம் கேட்டதால் விரக்தி: போலீஸ் நிலையத்தில் இளைஞர் தற்கொலை முயற்சி

பஞ்சாப் மாநிலம் பர்னாலா மாவட்டம் டொனாலோ பகுதியைச் சேர்ந்தவர் ஜபன்பிரீத் சிங். கடந்த 11-ம் தேதி இவரது கார் தீப்பிடித்து எரிந்ததில், வாகனம் முழுமையாக சேதமடைந்தது. இதையடுத்து, கார் தீ விபத்து தொடர்பாக காப்பீட்டு நிறுவனத்தை ஜபன்பிரீத் சிங் அணுகியுள்ளார். அப்போது, இந்த விபத்து குறித்து போலீசாரிடமிருந்து சான்றிதழ் பெற்று வருமாறு காப்பீட்டு நிறுவனம் அவரிடம் தெரிவித்துள்ளது. இதன்படி போலீஸ் நிலையத்துக்குச் சென்று சான்றிதழ் கேட்டபோது, அதனை வழங்குவதற்காக போலீசார் ரூ.10 ஆயிரம் லஞ்சம் கேட்டதாக கூறப்படுகிறது.

Advertisement
இதனால் மனமுடைந்த ஜபன்பிரீத் சிங், போலீஸ் நிலையத்திலேயே விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த போலீசார் அவரை உடனடியாக மீட்டுஅருகிலுள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். தற்போது அவரது உடல்நிலை சீராக இருப்பதாக மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக உயர் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மதிப்பீடு மற்றும் கருத்துகள்
இந்த செய்தி உங்களுக்கு எவ்வளவு பயனுள்ளதாக இருந்தது?
நடப்பு விலைகள்
🥇 Gold ₹14,010
🥈 Silver ₹250.00
⛽ Petrol ₹107.76
🛢️ Diesel ₹99.55
TNTAM/26/A7738
📰 நிருபர் ஆக
🏠 முகப்பு தமிழ்நாடு அரசியல் இந்தியா உலகம் சினிமா விளையாட்டு தொழில்நுட்பம் ஆன்மீகம் வேலை & கல்வி வணிகம் சுகாதாரம் வீடியோ சிறப்புக் கட்டுரைகள்
🔍 தேடல் ✍️ கட்டுரை எழுது ℹ️ தகவல் மையம்
📰 செய்தி பதிவிடு