Skip to main content
🌤️ —°C
சனி | 01 ஆகஸ்ட் 2026 | 16 ஆடி பராபவ வருடம்

ரேஷன் கடைகளில் ஆகஸ்ட் 2-ம் தேதி சிறப்பு பயோமெட்ரிக் முகாம்: தூத்துக்குடி கலெக்டர் அறிவிப்பு

ரேஷன் கடைகளில் ஆகஸ்ட் 2-ம் தேதி சிறப்பு பயோமெட்ரிக் முகாம்: தூத்துக்குடி கலெக்டர் அறிவிப்பு
தூத்துக்குடி மாவட்டத்தில் செயல்பட்டு வரும் அனைத்து நியாயவிலைக் கடைகளிலும் குடும்ப அட்டை உறுப்பினர்களுக்கான சிறப்பு பயோமெட்ரிக் பதிவு முகாம் நாளை (ஆகஸ்ட் 2) நடைபெறவுள்ளதாக மாவட்ட ஆட்சியர் விஷு மகாஜன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், குடும்ப அட்டையில் இடம்பெற்றுள்ள உறுப்பினர்கள் தங்களது கைரேகை மற்றும் கண்கருவிழி விவரங்களை பதிவு செய்வதற்காக காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை அனைத்து ரேஷன் கடைகளிலும் சிறப்பு முகாம் நடத்தப்பட உள்ளதாக கூறப்பட்டுள்ளது.நியாயவிலைக் கடைகள் மூலம் அத்தியாவசியப் பொருட்களை பெற்று வரும் குடும்ப அட்டைதாரர்களில், இதுவரை கைரேகை அல்லது கண்கருவிழி பதிவு செய்யாதவர்கள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி உடனடியாக தங்களது பயோமெட்ரிக் பதிவுகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.மேலும், வேலை காரணமாக வெளி மாவட்டங்கள் அல்லது பிற ஊர்களில் தங்கியிருப்பவர்கள், அதேபோல் பள்ளி மற்றும் கல்லூரிகளில் படித்து வரும் மாணவர்கள், தாங்கள் தற்போது வசிக்கும் பகுதியின் அருகிலுள்ள நியாயவிலைக் கடைக்கு நேரில் சென்று பயோமெட்ரிக் பதிவை மேற்கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.பொது விநியோகத் திட்டத்தின் கீழ் அரசின் சலுகைகளை தொடர்ந்து பெற, இந்த சிறப்பு முகாமைப் பயன்படுத்தி அனைவரும் தங்களது விவரங்களை பதிவு செய்து முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் விஷு மகாஜன் வலியுறுத்தியுள்ளார்.
மதிப்பீடு மற்றும் கருத்துகள்
இந்த செய்தி உங்களுக்கு எவ்வளவு பயனுள்ளதாக இருந்தது?
நடப்பு விலைகள்
🥇 Gold ₹13,230
🥈 Silver ₹240.00
Petrol ₹108.47
🛢️ Diesel ₹100.32
தினத்துளிர்
📰 நிருபர் ஆக
🏠 முகப்பு தமிழ்நாடு இந்தியா உலகம் சினிமா விளையாட்டு தொழில்நுட்பம் ஆன்மீகம் வேலை & கல்வி வணிகம் சுகாதாரம் வீடியோ சிறப்புக் கட்டுரைகள் 📸 பட செய்திகள்
📰 இ-பேப்பர் 🔍 தேடல் ✍️ கட்டுரை எழுது ℹ️ தகவல் மையம்
📰 செய்தி பதிவிடு