Skip to main content
தினத்துளிர்
TNTAM/26/A7738
🌤️ —°C
செவ்வாய் | 15 செப்டம்பர் 2026 | 30 ஆவணி பராபவ வருடம்

ரிக்கி பாண்டிங் அல்ல... ஆஸ்திரேலியாவின் சிறந்த கேப்டன் ஸ்டீவ் வாக் தான் - ஆரோன் பின்ச்

ரிக்கி பாண்டிங் அல்ல... ஆஸ்திரேலியாவின் சிறந்த கேப்டன் ஸ்டீவ் வாக் தான் - ஆரோன் பின்ச்

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் ஆரோன் பின்ச், அந்த நாட்டின் கிரிக்கெட் வரலாற்றில் மிகச் சிறந்த கேப்டன் யார் என்ற கேள்விக்கு தனது கருத்தை பகிர்ந்துள்ளார்.ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்ற அவர், டான் பிராட்மேன், ரிச்சி பெனாட், இயன் சாப்பல், மார்க் டெய்லர், ஆலன் பார்டர், ஸ்டீவ் வாக், ரிக்கி பாண்டிங், மைக்கேல் கிளார்க், ஸ்டீவ் ஸ்மித் மற்றும் தற்போதைய கேப்டன் பேட் கம்மின்ஸ் உள்ளிட்ட பல்வேறு காலகட்ட கேப்டன்களில், ஸ்டீவ் வாக்கையே ஆஸ்திரேலியாவின் தலைசிறந்த கேப்டனாக தேர்வு செய்தார். இதுகுறித்து பேசிய பின்ச், தனது சிறுவயதில் ஸ்டீவ் வாக் தனது கிரிக்கெட் வாழ்க்கையில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியவர் என்று குறிப்பிட்டார்.

Advertisement
மேலும், அவரது தலைமையில்தான் ஆஸ்திரேலிய அணி தனது பொற்காலத்தை எட்டியதாகவும் தெரிவித்தார். ஸ்டீவ் வாக் தலைமையில் ஆஸ்திரேலியா 1999 உலகக் கோப்பையை கைப்பற்றியதுடன், டெஸ்ட் கிரிக்கெட்டில் தொடர்ச்சியாக 16 போட்டிகளில் வெற்றி பெற்று உலகச் சாதனையும் படைத்தது. இந்த சாதனைகளே அவரை ஆஸ்திரேலிய கிரிக்கெட் வரலாற்றின் சிறந்த கேப்டனாக மதிக்க வைக்கின்றன என்று ஆரோன் பின்ச் பாராட்டினார்.

மதிப்பீடு மற்றும் கருத்துகள்
இந்த செய்தி உங்களுக்கு எவ்வளவு பயனுள்ளதாக இருந்தது?
நடப்பு விலைகள்
🥇 Gold ₹14,650
🥈 Silver ₹260.00
Petrol ₹108.47
🛢️ Diesel ₹100.32
TNTAM/26/A7738
📰 நிருபர் ஆக
🏠 முகப்பு தமிழ்நாடு அரசியல் இந்தியா உலகம் சினிமா விளையாட்டு தொழில்நுட்பம் ஆன்மீகம் வேலை & கல்வி வணிகம் சுகாதாரம் வீடியோ சிறப்புக் கட்டுரைகள்
🔍 தேடல் ✍️ கட்டுரை எழுது ℹ️ தகவல் மையம்
📰 செய்தி பதிவிடு