Skip to main content
தினத்துளிர்
🌤️ —°C
வெள்ளி | 04 செப்டம்பர் 2026 | 19 ஆவணி பராபவ வருடம்

ராமேஸ்வரம் - ஹுப்ளி சிறப்பு ரெயில் சேவை நீட்டிப்பு

ராமேஸ்வரம் - ஹுப்ளி சிறப்பு ரெயில் சேவை நீட்டிப்பு

பயணிகளின் தேவையை கருத்தில் கொண்டு, ராமேஸ்வரம் - ஹுப்ளி இடையேயான சிறப்பு ரெயில் சேவை மேலும் நீட்டிக்கப்பட்டுள்ளதாக தெற்கு ரெயில்வே தெரிவித்துள்ளது.ஹுப்ளியில் இருந்து ராமேஸ்வரத்திற்கு ஞாயிற்றுக்கிழமைகளில் காலை 6.50 மணிக்கு புறப்படும் சிறப்பு ரெயில் (வண்டி எண்: 07355), அக்டோபர் 4, 11, 18, 25 மற்றும் நவம்பர் 1, 8, 15, 22, 29 ஆகிய தேதிகளில் இயக்கப்படும். இதன்மூலம் மொத்தம் 9 சேவைகள் நீட்டிக்கப்பட்டுள்ளன.அதேபோல், ராமேஸ்வரத்தில் இருந்து ஹுப்ளிக்கு திங்கட்கிழமைகளில் இரவு 8 மணிக்கு புறப்படும் சிறப்பு ரெயில் (வண்டி எண்: 07356), அக்டோபர் 5, 12, 19, 26 மற்றும் நவம்பர் 2, 9, 16, 23, 30 ஆகிய தேதிகளில் இயக்கப்பட உள்ளது.

Advertisement
இந்த ரெயிலுக்கும் 9 சேவைகள் நீட்டிக்கப்பட்டுள்ளன.நீட்டிக்கப்பட்ட சிறப்பு ரெயில் சேவைகளுக்கான முன்பதிவு ஏற்கனவே தொடங்கியுள்ளதாக தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.

மதிப்பீடு மற்றும் கருத்துகள்
இந்த செய்தி உங்களுக்கு எவ்வளவு பயனுள்ளதாக இருந்தது?
நடப்பு விலைகள்
🥇 Gold ₹14,650
🥈 Silver ₹260.00
Petrol ₹108.47
🛢️ Diesel ₹100.32
தினத்துளிர்
📰 நிருபர் ஆக
🏠 முகப்பு தமிழ்நாடு அரசியல் இந்தியா உலகம் சினிமா விளையாட்டு தொழில்நுட்பம் ஆன்மீகம் வேலை & கல்வி வணிகம் சுகாதாரம் வீடியோ சிறப்புக் கட்டுரைகள்
🔍 தேடல் ✍️ கட்டுரை எழுது ℹ️ தகவல் மையம்
📰 செய்தி பதிவிடு