பயணிகளின் தேவையை கருத்தில் கொண்டு, ராமேஸ்வரம் - ஹுப்ளி இடையேயான சிறப்பு ரெயில் சேவை மேலும் நீட்டிக்கப்பட்டுள்ளதாக தெற்கு ரெயில்வே தெரிவித்துள்ளது.ஹுப்ளியில் இருந்து ராமேஸ்வரத்திற்கு ஞாயிற்றுக்கிழமைகளில் காலை 6.50 மணிக்கு புறப்படும் சிறப்பு ரெயில் (வண்டி எண்: 07355), அக்டோபர் 4, 11, 18, 25 மற்றும் நவம்பர் 1, 8, 15, 22, 29 ஆகிய தேதிகளில் இயக்கப்படும். இதன்மூலம் மொத்தம் 9 சேவைகள் நீட்டிக்கப்பட்டுள்ளன.அதேபோல், ராமேஸ்வரத்தில் இருந்து ஹுப்ளிக்கு திங்கட்கிழமைகளில் இரவு 8 மணிக்கு புறப்படும் சிறப்பு ரெயில் (வண்டி எண்: 07356), அக்டோபர் 5, 12, 19, 26 மற்றும் நவம்பர் 2, 9, 16, 23, 30 ஆகிய தேதிகளில் இயக்கப்பட உள்ளது. இந்த ரெயிலுக்கும் 9 சேவைகள் நீட்டிக்கப்பட்டுள்ளன.நீட்டிக்கப்பட்ட சிறப்பு ரெயில் சேவைகளுக்கான முன்பதிவு ஏற்கனவே தொடங்கியுள்ளதாக தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.