Skip to main content
தினத்துளிர்
TNTAM/26/A7738
🌤️ —°C
சனி | 10 அக்டோபர் 2026 | 24 புரட்டாசி பராபவ வருடம்

ராமநாதபுரம்: தடை செய்யப்பட்ட 38 கிலோ கடல் அட்டைகள் பறிமுதல்

ராமநாதபுரம்: தடை செய்யப்பட்ட 38 கிலோ கடல் அட்டைகள் பறிமுதல்

ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் பகுதியில் அரசால் தடை செய்யப்பட்ட கடல் அட்டைகள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.இதையடுத்து, ராமேஸ்வரம் அருகே உள்ள கரையூர் பகுதியில் போலீசார் மற்றும் தமிழ்நாடு வனம், வனவிலங்கு குற்றக் கட்டுப்பாட்டுப் பணியக அதிகாரிகள் இணைந்து இன்று சோதனை மேற்கொண்டனர்.சோதனையின்போது, தடை செய்யப்பட்ட 38 கிலோ பதப்படுத்தப்பட்ட கடல் அட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டன.

Advertisement
இவற்றின் மதிப்பு ரூ.2 லட்சத்திற்கும் அதிகமாக இருக்கும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.பறிமுதல் செய்யப்பட்ட கடல் அட்டைகள் இலங்கைக்கு கடத்தப்படுவதற்காக பதுக்கி வைக்கப்பட்டதா, அவற்றை பதுக்கி வைத்தது யார் என்பது குறித்து அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மதிப்பீடு மற்றும் கருத்துகள்
இந்த செய்தி உங்களுக்கு எவ்வளவு பயனுள்ளதாக இருந்தது?
நடப்பு விலைகள்
🥇 Gold ₹13,710
🥈 Silver ₹245.00
⛽ Petrol ₹107.76
🛢️ Diesel ₹99.55
TNTAM/26/A7738
📰 நிருபர் ஆக
🏠 முகப்பு தமிழ்நாடு அரசியல் இந்தியா உலகம் சினிமா விளையாட்டு தொழில்நுட்பம் ஆன்மீகம் வேலை & கல்வி வணிகம் சுகாதாரம் வீடியோ சிறப்புக் கட்டுரைகள்
🔍 தேடல் ✍️ கட்டுரை எழுது ℹ️ தகவல் மையம்
📰 செய்தி பதிவிடு