ஓணம் பண்டிகை மகிழ்ச்சி, ஒற்றுமை, செழிப்பை வளர்க்கிறது: பிரதமர் மோடி
கேரள மக்கள் ஆண்டுதோறும் பாரம்பரிய சிறப்புடன் கொண்டாடும் ஓணம் பண்டிகை இன்று நடைபெறுகிறது. மகாபலி மன்னரை வரவேற்கும் வகையிலும், அறுவடை திருநாளாகவும் இந்தப் பண்டிகை கொண்டாடப்படுகிறது.ஓணம் பண்டிகையை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோடி தனது எக்ஸ் பதிவில் மக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.அவர் வெளியிட்ட பதிவில், “ஓணம் பண்டிகையை முன்னிட்டு அனைவருக்கும் வாழ்த்துகள். அறுவடை திருவிழாவான ஓணம், மக்களிடையே மகிழ்ச்சி, ஒற்றுமை மற்றும் செழிப்பு போன்ற உணர்வுகளை மேலும் வலுப்படுத்தும் பண்டிகையாக விளங்குகிறது.உலகம் முழுவதும் உற்சாகத்துடன் கொண்டாடப்படும் இந்தத் திருவிழா, ஒவ்வொரு ஆண்டும் கேரளாவில் முக்கியத்துவத்துடன் கொண்டாடப்படுகிறது.
ஓணம் பண்டிகை அனைவரது வாழ்விலும் மகிழ்ச்சி, ஒற்றுமை மற்றும் செழிப்பை அதிகரிக்கட்டும்” என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.