Skip to main content
தினத்துளிர்
TNTAM/26/A7738
🌤️ —°C
ஞாயிறு | 11 அக்டோபர் 2026 | 25 புரட்டாசி பராபவ வருடம்

‘ராக்கா’ படத்தில் இணையும் பிரபல நடிகை? வில்லி வேடத்தில் ஐஸ்வர்யா லட்சுமி

‘ராக்கா’ படத்தில் இணையும் பிரபல நடிகை? வில்லி வேடத்தில் ஐஸ்வர்யா லட்சுமி

அல்லு அர்ஜுன் நடிப்பில், இயக்குநர் அட்லீ இயக்கி வரும் ‘ராக்கா’ திரைப்படம் பான்-இந்தியா படமாக உருவாகி வருகிறது. இதனால் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.இப்படத்தில் ஏற்கனவே தீபிகா படுகோன் இணைந்துள்ள நிலையில், ராஷ்மிகா மந்தனா, மிருணாள் தாகூர், ஜான்வி கபூர் உள்ளிட்ட நடிகைகளும் நடித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த நிலையில், மலையாள நடிகை ஐஸ்வர்யா லட்சுமியும் ‘ராக்கா’ படத்தில் இணையவுள்ளதாக கூறப்படுகிறது.மேலும், இப்படத்தில் அவர் இதுவரை ஏற்றிராத வகையில் மிரட்டலான வில்லி கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Advertisement
இருப்பினும், ஐஸ்வர்யா லட்சுமியின் கதாபாத்திரம் தொடர்பான தகவலை படக்குழு இதுவரை அதிகாரபூர்வமாக உறுதி செய்யவில்லை.‘ராக்கா’ படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு விரைவில் ஐதராபாத்தில் தொடங்கும் என தெரிகிறது. இதனிடையே, ஐஸ்வர்யா லட்சுமி தற்போது ‘சம்பரால ஏடிகட்டு’ என்ற தெலுங்கு திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்து வருகிறார்.

மதிப்பீடு மற்றும் கருத்துகள்
இந்த செய்தி உங்களுக்கு எவ்வளவு பயனுள்ளதாக இருந்தது?
நடப்பு விலைகள்
🥇 Gold ₹13,710
🥈 Silver ₹245.00
⛽ Petrol ₹107.76
🛢️ Diesel ₹99.55
TNTAM/26/A7738
📰 நிருபர் ஆக
🏠 முகப்பு தமிழ்நாடு அரசியல் இந்தியா உலகம் சினிமா விளையாட்டு தொழில்நுட்பம் ஆன்மீகம் வேலை & கல்வி வணிகம் சுகாதாரம் வீடியோ சிறப்புக் கட்டுரைகள்
🔍 தேடல் ✍️ கட்டுரை எழுது ℹ️ தகவல் மையம்
📰 செய்தி பதிவிடு