‘ராக்கா’ படத்தில் இணையும் பிரபல நடிகை? வில்லி வேடத்தில் ஐஸ்வர்யா லட்சுமி
படம் தயாராகிறது… Generating image…
PRGI : TNTAM/26/A7738 தினத்துளிர் தமிழ் - மதுரை
Advertisement
தினத்துளிர்
தமிழ் தினசரி நாளிதழ் - www.thinathulir.com
Advertisement
26 Aug 2026, புதன் | மலர் - 01 | இதழ் - 07 | பக்கங்கள்-8 | விலை - ரூ .5/- 26 Aug 2026, Wednesday | Vol-01 - Issue-07 | Pages 8 | Rs.5/-

‘ராக்கா’ படத்தில் இணையும் பிரபல நடிகை? வில்லி வேடத்தில் ஐஸ்வர்யா லட்சுமி

‘ராக்கா’ படத்தில் இணையும் பிரபல நடிகை? வில்லி வேடத்தில் ஐஸ்வர்யா லட்சுமி

அல்லு அர்ஜுன் நடிப்பில், இயக்குநர் அட்லீ இயக்கி வரும் ‘ராக்கா’ திரைப்படம் பான்-இந்தியா படமாக உருவாகி வருகிறது. இதனால் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.இப்படத்தில் ஏற்கனவே தீபிகா படுகோன் இணைந்துள்ள நிலையில், ராஷ்மிகா மந்தனா, மிருணாள் தாகூர், ஜான்வி கபூர் உள்ளிட்ட நடிகைகளும் நடித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த நிலையில், மலையாள நடிகை ஐஸ்வர்யா லட்சுமியும் ‘ராக்கா’ படத்தில் இணையவுள்ளதாக கூறப்படுகிறது.மேலும், இப்படத்தில் அவர் இதுவரை ஏற்றிராத வகையில் மிரட்டலான வில்லி கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இருப்பினும், ஐஸ்வர்யா லட்சுமியின் கதாபாத்திரம் தொடர்பான தகவலை படக்குழு இதுவரை அதிகாரபூர்வமாக உறுதி செய்யவில்லை.‘ராக்கா’ படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு விரைவில் ஐதராபாத்தில் தொடங்கும் என தெரிகிறது. இதனிடையே, ஐஸ்வர்யா லட்சுமி தற்போது ‘சம்பரால ஏடிகட்டு’ என்ற தெலுங்கு திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்து வருகிறார்.