ரஷியாவின் ஏவுகணை தாக்குதல்: உக்ரைன் தலைநகர் கீவில் 9 பேர் உயிரிழப்பு
உக்ரைன் மீது ரஷியா மேற்கொண்ட ஏவுகணை தாக்குதலில் 9 பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.ரஷியா-உக்ரைன் இடையிலான போர் நான்கு ஆண்டுகளுக்கும் மேலாக நீடித்து வரும் நிலையில், இந்த மோதலில் இதுவரை ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். உக்ரைனுக்கு அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் ஆயுதங்கள் உள்ளிட்ட பல்வேறு வகையான ஆதரவுகளை தொடர்ந்து வழங்கி வருகின்றன.போருக்கு முற்றுப்புள்ளி வைக்கும் நோக்கில் அமெரிக்க அதிபர் டிரம்ப் மேற்கொண்ட போர் நிறுத்த முயற்சிகள் வெற்றியடையாததால், இரு நாடுகளுக்கும் இடையிலான மோதல் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.இந்தச் சூழலில், ரஷியா இன்று அதிகாலை உக்ரைன் தலைநகர் கீவை குறிவைத்து ஏவுகணைத் தாக்குதல் நடத்தியது.
இந்த தாக்குதலில் 9 பேர் உயிரிழந்ததுடன், மேலும் 28 பேர் காயமடைந்துள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன.