Skip to main content
தினத்துளிர்
TNTAM/26/A7738
🌤️ —°C
ஞாயிறு | 11 அக்டோபர் 2026 | 25 புரட்டாசி பராபவ வருடம்

ரேஷன் கடைகளில் குறைந்த விலையில் வெங்காயம் வினியோகம்

ரேஷன் கடைகளில் குறைந்த விலையில்  வெங்காயம் வினியோகம்

சென்னை கோயம்பேடு சந்தையில் வெங்காயத்தின் விலை அதிகரித்துள்ள நிலையில், பொதுமக்களுக்கு குறைந்த விலையில் வெங்காயம் கிடைக்கும் வகையில் தமிழக அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. இதன்படி, கூட்டுறவுத் துறையின் கீழ் செயல்படும் ரேஷன் கடைகள் மற்றும் கூட்டுறவு அங்காடிகளில் ஒரு குடும்ப அட்டைக்கு ஒரு கிலோ வெங்காயம் ரூ.35-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. கோயம்பேடு மொத்த சந்தையில் நாசிக் வெங்காயம் கிலோ ரூ.50-க்கும், சில்லறை சந்தையில் ரூ.70-க்கும் விற்கப்படுகிறது. அதேபோல், ஆந்திரா வெங்காயம் மொத்த விலையில் கிலோ ரூ.40-க்கும், சில்லறை விலையில் ரூ.50-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. வெங்காயத்தின் விலை உயர்வைக் கட்டுப்படுத்தும் நோக்கில், தமிழக அரசு தேசிய நுகர்வோர் கூட்டுறவு அமைப்பிடமிருந்து வெங்காயத்தைக் கொள்முதல் செய்து பொதுமக்களுக்கு மானிய விலையில் வழங்கி வருகிறது.

Advertisement
ஏற்கெனவே இரண்டு கட்டங்களாக வெங்காயம் கொள்முதல் செய்யப்பட்டு விற்பனை செய்யப்பட்ட நிலையில், தற்போது மூன்றாவது கட்டமாக 700 மெட்ரிக் டன் வெங்காயம் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, மூன்றாம் கட்ட விற்பனை தற்போது தொடங்கியுள்ளது. கூட்டுறவுத் துறையின் கீழ் இயங்கும் நியாயவிலைக் கடைகள் மற்றும் கூட்டுறவு அங்காடிகள் மூலம் ஒரு குடும்ப அட்டைக்கு ஒரு கிலோ வெங்காயம் ரூ.35 என்ற விலையில் வழங்கப்படுகிறது. சென்னையில் நேற்று முதல் இந்த விற்பனை தொடங்கியுள்ள நிலையில், தமிழகத்தின் பிற மாவட்டங்களில் இன்று முதல் வெங்காயம் விற்பனை செய்யப்படுகிறது. இந்த விற்பனை தொடர்பான புகார்களைத் தெரிவிக்க 96005 61969 என்ற வாட்ஸ்அப் எண் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

மதிப்பீடு மற்றும் கருத்துகள்
இந்த செய்தி உங்களுக்கு எவ்வளவு பயனுள்ளதாக இருந்தது?
நடப்பு விலைகள்
🥇 Gold ₹13,710
🥈 Silver ₹245.00
⛽ Petrol ₹107.76
🛢️ Diesel ₹99.55
TNTAM/26/A7738
📰 நிருபர் ஆக
🏠 முகப்பு தமிழ்நாடு அரசியல் இந்தியா உலகம் சினிமா விளையாட்டு தொழில்நுட்பம் ஆன்மீகம் வேலை & கல்வி வணிகம் சுகாதாரம் வீடியோ சிறப்புக் கட்டுரைகள்
🔍 தேடல் ✍️ கட்டுரை எழுது ℹ️ தகவல் மையம்
📰 செய்தி பதிவிடு