Skip to main content
தினத்துளிர்
TNTAM/26/A7738
🌤️ —°C
ஞாயிறு | 11 அக்டோபர் 2026 | 25 புரட்டாசி பராபவ வருடம்

சர்வதேச பெண் குழந்தைகள் தினம்: முதல் -அமைச்சர் விஜய் வாழ்த்து!

சர்வதேச பெண் குழந்தைகள் தினம்: முதல் -அமைச்சர் விஜய் வாழ்த்து!

சர்வதேச பெண் குழந்தைகள் தினத்தை முன்னிட்டு, முதல்-அமைச்சர் விஜய் பெண் குழந்தைகளுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், பெண் குழந்தைகளின் உரிமைகளைப் பாதுகாத்து, அவர்களின் சிறப்புகளைக் கொண்டாட வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தியுள்ளார். அந்தப் பதிவில், ஐக்கிய நாடுகள் குழந்தைகள் நிதியத்தின் (UNICEF) சார்பில் கொண்டாடப்படும் சர்வதேச பெண் குழந்தைகள் தினத்தில், அனைத்து பெண் குழந்தைகளுக்கும் தனது அன்பான வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்வதாக குறிப்பிட்டுள்ளார். மேலும், பெண் குழந்தைகளை உலகின் அழகிய கவிதைகளாக வர்ணித்துள்ள அவர், அவர்களின் புன்னகை குடும்பத்திற்கு மகிழ்ச்சியையும், துள்ளல் இயற்கைக்கு அழகையும் சேர்ப்பதாக தெரிவித்துள்ளார்.

Advertisement
ஒரு பெண் குழந்தையின் பிறப்புடன் அன்பு, கருணை மற்றும் அளவற்ற ஆளுமையும் இணைந்து உருவாகின்றன என்றும் அவர் கூறியுள்ளார். பெண் குழந்தைகளுக்கு ஆரோக்கியமான வாழ்க்கை, தரமான கல்வி, பாதுகாப்பான சூழல், சம உரிமைகள் மற்றும் முழுமையான சுதந்திரம் ஆகியவற்றை உறுதி செய்வது அனைவரின் கடமை என்றும் விஜய் வலியுறுத்தியுள்ளார். பெண் குழந்தைகளின் கனவுகள் நனவாக அவர்களுக்கு வாய்ப்புகளை உருவாக்கி, அவர்களின் முன்னேற்றத்திற்குத் துணை நிற்க வேண்டும் என்றும், பாகுபாடற்ற சமத்துவமான சமூகத்தை உருவாக்க அனைவரும் ஒன்றிணைந்து உறுதியேற்க வேண்டும் என்றும் தனது பதிவில் அவர் தெரிவித்துள்ளார்

மதிப்பீடு மற்றும் கருத்துகள்
இந்த செய்தி உங்களுக்கு எவ்வளவு பயனுள்ளதாக இருந்தது?
நடப்பு விலைகள்
🥇 Gold ₹13,710
🥈 Silver ₹245.00
⛽ Petrol ₹107.76
🛢️ Diesel ₹99.55
TNTAM/26/A7738
📰 நிருபர் ஆக
🏠 முகப்பு தமிழ்நாடு அரசியல் இந்தியா உலகம் சினிமா விளையாட்டு தொழில்நுட்பம் ஆன்மீகம் வேலை & கல்வி வணிகம் சுகாதாரம் வீடியோ சிறப்புக் கட்டுரைகள்
🔍 தேடல் ✍️ கட்டுரை எழுது ℹ️ தகவல் மையம்
📰 செய்தி பதிவிடு