Skip to main content
🌤️ —°C
புதன் | 29 ஜூலை 2026 | 13 ஆடி பராபவ வருடம்

ரன்பீர் கபூரின் ‘ராமாயணா’ டிரெய்லர் வெளியீடு தள்ளிவைப்பு; உலகளவில் புதிய தேதியில் அறிமுகம்

ரன்பீர் கபூரின் ‘ராமாயணா’ டிரெய்லர் வெளியீடு தள்ளிவைப்பு; உலகளவில் புதிய தேதியில் அறிமுகம்
வால்மீகி இயற்றிய ராமாயணம் காவியத்தை அடிப்படையாகக் கொண்டு, இயக்குநர் நிதேஷ் திவாரி இயக்கத்தில் மிகப்பெரிய பொருட்செலவில் உருவாகி வரும் **‘ராமாயணா’** திரைப்படம் இந்திய சினிமாவில் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள படங்களில் ஒன்றாகும். இந்தப் படத்தில் ரன்பீர் கபூர் ராமராகவும், சாய் பல்லவி சீதையாகவும், யாஷ் ராவணனாகவும் நடித்துள்ளனர். இரண்டு பாகங்களாக உருவாகும் இந்தத் திரைப்படத்தின் முதல் பாகம் 2026 தீபாவளியிலும், இரண்டாம் பாகம் 2027 தீபாவளியிலும் வெளியாகும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது.படத்திற்கு ஆஸ்கர் விருது பெற்ற இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான் மற்றும் உலகப் புகழ்பெற்ற இசையமைப்பாளர் ஹான்ஸ் ஜிம்மர் இணைந்து இசையமைத்து வருகின்றனர். சமீபத்தில் வெளியிடப்பட்ட கிளிம்ப்ஸ் மற்றும் டீசர் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று, படத்தின் மீதான எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்துள்ளது. மேலும், இந்திப் பதிப்பின் திரையரங்கு விநியோக உரிமையை தர்மா புரொடக்ஷன்ஸ நிறுவனம் சுமார் ரூ.250 கோடிக்கு பெற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.முன்னதாக, படத்தின் டிரெய்லர் ஜூலை 24-ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இதனை முன்னிட்டு இயக்குநர் நிதேஷ் திவாரி மற்றும் தயாரிப்பாளர் நமித் மல்ஹோத்ரா முன்னிலையில் நடைபெறும் விழாவில் ரன்பீர் கபூர், சாய் பல்லவி உள்ளிட்ட முக்கிய நட்சத்திரங்கள் பங்கேற்பார்கள் என்றும் கூறப்பட்டிருந்தது.இந்நிலையில், சோனி பிக்சர்ஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் ‘ராமாயணா’ திரைப்படத்தை உலகளாவிய அளவில் வெளியிடும் பொறுப்பை ஏற்றுள்ளதால், டிரெய்லர் வெளியீடு வேறு ஒரு நாளுக்கு மாற்றப்பட்டுள்ளதாக தயாரிப்பாளர் அறிவித்துள்ளார்.இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், ‘ராமாயணா’ திரைப்படத்தின் உலகப் பயணம் தற்போது தொடங்கியுள்ளது.
Advertisement
இந்தப் படத்தை உலகம் முழுவதும் கொண்டு செல்லும் கனவு, சோனி பிக்சர்ஸ் என்டர்டெயின்மென்டுடன் இணைந்ததன் மூலம் நனவாகியுள்ளது. அதனால், டிரெய்லர் உலக அரங்கில் மிகப் பிரம்மாண்டமாக புதிய தேதியில் வெளியிடப்படும். இந்திய சினிமாவின் நூற்றாண்டு வரலாற்றில் இது பெருமைக்குரிய தருணமாகும். ஹாலிவுட் தரத்தில் உலகம் முழுவதும் ‘ராமாயணா’ வெளியாக உள்ளது. இந்திய கலாச்சாரத்தையும் நம் பாரம்பரியக் கதைகளையும் உலகளவில் உயர்ந்த தரத்தில் கொண்டு செல்லும் வாய்ப்பு இது. ‘ராமாயணம்’ மீது அன்பும் நம்பிக்கையும் கொண்ட அனைவருக்கும் எனது நன்றிகள். நாட்டின் எதிர்காலமான இளைஞர்களுக்காக சிறந்ததை உருவாக்க நாம் அனைவரும் பாடுபட வேண்டும்’* என்று தெரிவித்துள்ளார். இதனுடன்,“Ramayana’s journey from Bharat to the World has begun” என்ற வாசகத்துடன் சமூக வலைதளத்திலும் அவர் பதிவிட்டுள்ளார்.
மதிப்பீடு மற்றும் கருத்துகள்
இந்த செய்தி உங்களுக்கு எவ்வளவு பயனுள்ளதாக இருந்தது?
நடப்பு விலைகள்
🥇 Gold ₹13,230
🥈 Silver ₹240.00
Petrol ₹108.47
🛢️ Diesel ₹100.32
தினத்துளிர்
📰 நிருபர் ஆக
🏠 முகப்பு தமிழ்நாடு இந்தியா உலகம் சினிமா விளையாட்டு தொழில்நுட்பம் ஆன்மீகம் வேலை & கல்வி வணிகம் சுகாதாரம் வீடியோ சிறப்புக் கட்டுரைகள் 📸 பட செய்திகள்
📰 இ-பேப்பர் 🔍 தேடல் ✍️ கட்டுரை எழுது ℹ️ தகவல் மையம்
📰 செய்தி பதிவிடு