Skip to main content
தினத்துளிர்
TNTAM/26/A7738
🌤️ —°C
புதன் | 04 நவம்பர் 2026 | 18 ஐப்பசி பராபவ வருடம்

ரஜினியின் “தர்மன்” படத்தில் இணைந்த நடிகை ஸ்ரீலீலா

ரஜினியின் “தர்மன்” படத்தில் இணைந்த நடிகை ஸ்ரீலீலா

நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் ‘தர்மன்’ திரைப்படத்தில் நடிகை ஸ்ரீலீலா இணைந்துள்ளார். இதனை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ள படக்குழு, அவரை அறிமுகப்படுத்தும் வீடியோவையும் வெளியிட்டுள்ளது. ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகும் 173-வது திரைப்படம் ‘தர்மன்’. ‘ஓ மை கடவுளே’, ‘டிராகன்’ உள்ளிட்ட படங்களை இயக்கிய அஸ்வத் மாரிமுத்து இப்படத்தை இயக்கி வருகிறார். கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் படத்தைத் தயாரிக்கிறது. ஆக்‌ஷன் கதைக்களத்தில் உருவாகும் இப்படத்தில் ரஜினிகாந்த் மருத்துவராக நடிப்பதாகக் கூறப்படுகிறது. சிம்ரன், ராஷி கன்னா, யோகி பாபு உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். அனிருத் இசையமைக்க, நிகேத் பொம்மி ஒளிப்பதிவுப் பணிகளை மேற்கொள்கிறார். பிரதீப் ஈ. ராகவ் படத்தொகுப்பாளராகப் பணியாற்றுகிறார். மேலும், பிரபல தெலுங்கு நடிகர் ராம் பொதினேனி இப்படத்தில் ரஜினிகாந்துக்கு வில்லனாக நடிக்க இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. ‘தர்மன்’ படத்தின் படப்பிடிப்பு பல்வேறு கட்டங்களாக நடைபெற்று வருகிறது.

Advertisement
சமீபத்தில் மூன்றாம் கட்ட படப்பிடிப்பு நிறைவடைந்ததை இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து புகைப்படங்களைப் பகிர்ந்து அறிவித்தார். தற்போது மைசூரு உள்ளிட்ட இடங்களில் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. இப்படத்தை 2027-ம் ஆண்டு பொங்கல் பண்டிகையையொட்டி வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளதாகத் தகவல் தெரிவிக்கிறது. இதற்கிடையே, நடிகை நயன்தாரா இப்படத்தில் இணைந்துள்ளதாக ஏற்கனவே படக்குழு கிளிம்ப்ஸ் வீடியோ மூலம் அறிவித்திருந்தது. அவர் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார். இந்நிலையில், தற்போது நடிகை ஸ்ரீலீலாவும் ‘தர்மன்’ படத்தில் இணைந்துள்ளார். இதனை உறுதிப்படுத்தும் வகையில், அவரை வரவேற்று அறிமுக வீடியோவைப் படக்குழு வெளியிட்டுள்ளது. ஸ்ரீலீலா ஏற்கும் கதாபாத்திரம் படத்தில் முக்கிய பங்கு வகிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ரஜினிகாந்த், நயன்தாரா, ஸ்ரீலீலா என முன்னணி நட்சத்திரங்கள் இணைந்துள்ளதால், ‘தர்மன்’ திரைப்படத்தின் மீதான ரசிகர்களின் எதிர்பார்ப்பு மேலும் அதிகரித்துள்ளது.

மதிப்பீடு மற்றும் கருத்துகள்
இந்த செய்தி உங்களுக்கு எவ்வளவு பயனுள்ளதாக இருந்தது?
நடப்பு விலைகள்
🥇 Gold ₹13,135
🥈 Silver ₹220.00
⛽ Petrol ₹107.76
🛢️ Diesel ₹99.55
TNTAM/26/A7738
📰 நிருபர் ஆக
🏠 முகப்பு தமிழ்நாடு அரசியல் இந்தியா உலகம் சினிமா விளையாட்டு தொழில்நுட்பம் ஆன்மீகம் வேலை & கல்வி வணிகம் சுகாதாரம் வீடியோ சிறப்புக் கட்டுரைகள்
🔍 தேடல் ✍️ கட்டுரை எழுது ℹ️ தகவல் மையம்
📰 செய்தி பதிவிடு