Skip to main content
தினத்துளிர்
TNTAM/26/A7738
🌤️ —°C
புதன் | 04 நவம்பர் 2026 | 18 ஐப்பசி பராபவ வருடம்

முதலாவது ஒருநாள் போட்டி: டாஸ் வென்ற இந்தியா பந்துவீச்சு தேர்வு!

முதலாவது ஒருநாள் போட்டி: டாஸ் வென்ற இந்தியா பந்துவீச்சு தேர்வு!

நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி, அங்கு நடைபெற்ற 20 ஓவர் தொடரை 3-2 என்ற கணக்கில் கைப்பற்றியது. இதனைத் தொடர்ந்து இரு அணிகளும் ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் மோதுகின்றன. இந்தத் தொடரின் முதல் ஒருநாள் போட்டி இன்று (புதன்கிழமை) ஆக்லாந்தில் உள்ள ஈடன் பார்க் மைதானத்தில் நடைபெறுகிறது. இப்போட்டிக்கான டாஸ் சற்றுமுன் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் கில், முதலில் பந்துவீச முடிவு செய்தார். இதையடுத்து நியூசிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்ய களமிறங்குகிறது.

Advertisement
இந்திய அணியின் ஆடும் லெவன்: கில், ரோஹித் சர்மா, விராட் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர், அக்சர் படேல், கே.எல்.ராகுல், நமன் திர், அன்ஷுல் கம்போஜ், ஆக்கிப் நபி, குர்னூர் ப்ரார், அர்ஷ்தீப் சிங். நியூசிலாந்து அணியின் ஆடும் லெவன்: டிம் சீபர்ட், வில் யங், ஹென்றி நிக்கோல்ஸ், டேரில் மிட்செல், டாம் லாதம் (விக்கெட் கீப்பர்), கிளென் பிலிப்ஸ், மிட்செல் சாண்ட்னர், நாதன் ஸ்மித், கைல் ஜேமிசன், ஜேக்கப் டபி, பிளேயர் டிக்னர்.

மதிப்பீடு மற்றும் கருத்துகள்
இந்த செய்தி உங்களுக்கு எவ்வளவு பயனுள்ளதாக இருந்தது?
நடப்பு விலைகள்
🥇 Gold ₹13,135
🥈 Silver ₹220.00
⛽ Petrol ₹107.76
🛢️ Diesel ₹99.55
TNTAM/26/A7738
📰 நிருபர் ஆக
🏠 முகப்பு தமிழ்நாடு அரசியல் இந்தியா உலகம் சினிமா விளையாட்டு தொழில்நுட்பம் ஆன்மீகம் வேலை & கல்வி வணிகம் சுகாதாரம் வீடியோ சிறப்புக் கட்டுரைகள்
🔍 தேடல் ✍️ கட்டுரை எழுது ℹ️ தகவல் மையம்
📰 செய்தி பதிவிடு