Skip to main content
தினத்துளிர்
🌤️ —°C
செவ்வாய் | 01 செப்டம்பர் 2026 | 16 ஆவணி பராபவ வருடம்

முன்விரோதத்தில் வீட்டின் மீது பெட்ரோல் பாட்டில் வீச்சு: வாலிபர் கைது

முன்விரோதத்தில் வீட்டின் மீது பெட்ரோல் பாட்டில் வீச்சு: வாலிபர் கைது

திருநெல்வேலி மாவட்டம் முக்கூடல் அருகே, முன்விரோதம் காரணமாக வீட்டின் மீது பெட்ரோல் நிரப்பிய பாட்டிலை வீசி, கொலை மிரட்டல் விடுத்ததாக இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.முக்கூடல் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பொட்டல் காலனியைச் சேர்ந்தவர் பால்துரை (25). இவருக்கும் அரியநாயகிபுரத்தைச் சேர்ந்த மணிக்கும் (25) இடையே நேற்று முன்தினம் இரவு மதுபோதையில் ஏற்பட்ட தகராறு காரணமாக முன்விரோதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.இந்த நிலையில், மணி பதிவு எண் இல்லாத இருசக்கர வாகனத்தில் வந்து பால்துரையின் வீட்டின் மீது பெட்ரோல் நிரப்பிய பாட்டிலை வீசியுள்ளார்.

Advertisement
மேலும், பால்துரையை கொலை செய்து விடுவதாக மிரட்டல் விடுத்துவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றதாக தெரிகிறது.இதுகுறித்து முக்கூடல் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டு வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதையடுத்து இன்ஸ்பெக்டர் மற்றும் சப்-இன்ஸ்பெக்டர் தலைமையிலான போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.விசாரணையைத் தொடர்ந்து தலைமறைவாக இருந்த அரியநாயகிபுரத்தைச் சேர்ந்த வேம்புவின் மகன் மணியை போலீசார் இன்று கைது செய்தனர். அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கான சட்டப்பூர்வ நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

மதிப்பீடு மற்றும் கருத்துகள்
இந்த செய்தி உங்களுக்கு எவ்வளவு பயனுள்ளதாக இருந்தது?
நடப்பு விலைகள்
🥇 Gold ₹14,650
🥈 Silver ₹260.00
Petrol ₹108.47
🛢️ Diesel ₹100.32
தினத்துளிர்
📰 நிருபர் ஆக
🏠 முகப்பு தமிழ்நாடு அரசியல் இந்தியா உலகம் சினிமா விளையாட்டு தொழில்நுட்பம் ஆன்மீகம் வேலை & கல்வி வணிகம் சுகாதாரம் வீடியோ சிறப்புக் கட்டுரைகள்
🔍 தேடல் ✍️ கட்டுரை எழுது ℹ️ தகவல் மையம்
📰 செய்தி பதிவிடு