Skip to main content
தினத்துளிர்
🌤️ —°C
செவ்வாய் | 01 செப்டம்பர் 2026 | 16 ஆவணி பராபவ வருடம்

மேட்டூர் அணையை திறந்துவைத்த 7-வது முதல்-அமைச்சர் விஜய்..!

மேட்டூர் அணையை திறந்துவைத்த 7-வது முதல்-அமைச்சர் விஜய்..!

தமிழகத்தின் நெற்களஞ்சியமாக விளங்கும் தஞ்சாவூர் உள்ளிட்ட 13 டெல்டா மாவட்டங்களின் பாசனம் மற்றும் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் முக்கிய நீராதாரமாக மேட்டூர் அணை உள்ளது. கடந்த 1934-ம் ஆண்டு கட்டப்பட்ட இந்த அணையின் முழு கொள்ளளவு 120 அடியாகும். இதன் நீரை நம்பி குறுவை, சம்பா, தாளடி உள்ளிட்ட சாகுபடிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.தமிழ்நாட்டில் நடைபெறும் நெல் சாகுபடியில் சுமார் மூன்றில் ஒரு பங்கு டெல்டா மாவட்டங்களிலேயே நடைபெறுகிறது. மேட்டூர் அணையில் இருந்து காவிரி ஆற்றில் திறந்துவிடப்படும் தண்ணீர் மூலம் சுமார் 17 லட்சம் ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.சுமார் 93 ஆண்டுகள் பாரம்பரியம் கொண்ட மேட்டூர் அணை, பாசனத்துக்காக வழக்கமாக ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 12-ம் தேதி திறக்கப்படுவது வழக்கம். எனினும், தென்மேற்கு பருவமழை போதிய அளவில் பெய்யாத காலங்களில் அந்த தேதியில் அணையை திறப்பதில் சிக்கல் ஏற்படும்.அந்த வகையில், இந்த ஆண்டும் வழக்கமான காலத்தில் அணையை திறக்க முடியாத நிலை ஏற்பட்டதால் குறுவை சாகுபடி பாதிக்கப்பட்டது.

Advertisement
இந்நிலையில், சம்பா சாகுபடிக்கான நீர் தேவையை கருத்தில் கொண்டு, முதல்-அமைச்சர் ஜோசப் விஜய் இன்று (செப்டம்பர் 1) முதல்முறையாக மேட்டூர் அணையை திறந்துவைத்துள்ளார்.மேட்டூர் அணையின் வரலாற்றில் இதுவரை 6 தமிழக முதல்-அமைச்சர்கள் இங்கிருந்து பாசனத்துக்காக தண்ணீரை திறந்துவைத்துள்ளனர். முன்னாள் முதல்-அமைச்சர்கள் காமராஜர் (1954-1963), கருணாநிதி (1969-1971, 1971-1976, 1989-1991, 1996-2001, 2006-2011), எம்.ஜி.ஆர். (1977-1987), ஜெயலலிதா (1991-1996, 2001-2006, 2011-2014, 2015-2016), எடப்பாடி பழனிசாமி (2016-2021) மற்றும் மு.க. ஸ்டாலின் (2021-2026) ஆகியோர் ஏற்கனவே மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறந்துவைத்துள்ளனர்.தற்போது, இந்தப் பட்டியலில் 7-வது முதல்-அமைச்சராக ஜோசப் விஜய்யும் இணைந்துள்ளார்.

மதிப்பீடு மற்றும் கருத்துகள்
இந்த செய்தி உங்களுக்கு எவ்வளவு பயனுள்ளதாக இருந்தது?
நடப்பு விலைகள்
🥇 Gold ₹14,650
🥈 Silver ₹260.00
Petrol ₹108.47
🛢️ Diesel ₹100.32
தினத்துளிர்
📰 நிருபர் ஆக
🏠 முகப்பு தமிழ்நாடு அரசியல் இந்தியா உலகம் சினிமா விளையாட்டு தொழில்நுட்பம் ஆன்மீகம் வேலை & கல்வி வணிகம் சுகாதாரம் வீடியோ சிறப்புக் கட்டுரைகள்
🔍 தேடல் ✍️ கட்டுரை எழுது ℹ️ தகவல் மையம்
📰 செய்தி பதிவிடு