முதல்-அமைச்சர் விஜயை சந்தித்த ஃபோர்டு உயர்மட்டக் குழு; தமிழ்நாட்டில் உற்பத்தி விரிவாக்கம் குறித்து ஆலோசனை
தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பின்படி, முதல்-அமைச்சர் விஜயை அமெரிக்காவைச் சேர்ந்த முன்னணி கார் உற்பத்தி நிறுவனமான ஃபோர்டின் துணைத் தலைவர் மேத்யூ கோட்லெவ்ஸ்கி தலைமையிலான உயர்மட்ட பிரதிநிதிகள் இன்று (ஜூலை 20, 2026) சென்னை தலைமைச் செயலகத்தில் நேரில் சந்தித்து ஆலோசனை நடத்தினர். இந்தச் சந்திப்பில், தமிழ்நாட்டில் ஃபோர்டு நிறுவனம் தனது வாகன உற்பத்தி நடவடிக்கைகளை மீண்டும் தொடங்கும் திட்டம், தற்போது செயல்பட்டு வரும் உலகளாவிய திறன் மையங்களின் விரிவாக்கம் மற்றும் எதிர்கால உற்பத்தி முதலீட்டு திட்டங்கள் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டதாக அரசு தெரிவித்துள்ளதுஃபோர்டு நிறுவனம் தற்போது சென்னையில் மிகப்பெரிய உலகளாவிய திறன் மையத்தை இயக்கி வருவதுடன், அதன் மூலம் சுமார் 12,000 தொழில்நுட்ப வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன. அண்மையில் கோயம்புத்தூரிலும் புதிய உலகளாவிய திறன் மையம் தொடங்கப்பட்டுள்ளது. மேலும், மறைமலைநகரில் உள்ள அதன் உற்பத்தி வளாகத்தில் ரூ.3,250 கோடி முதலீட்டில் இன்ஜின் உற்பத்தியை தொடங்க நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இதன் மூலம் மேலும் 600 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.சந்திப்பின்போது, ஃபோர்டு நிறுவனத்துக்கும் தமிழ்நாட்டிற்கும் இடையிலான 30 ஆண்டுகால தொழில் உறவை முதல்-அமைச்சர் விஜய் நினைவுகூர்ந்தார்.