Skip to main content
தினத்துளிர்
TNTAM/26/A7738
🌤️ —°C
புதன் | 04 நவம்பர் 2026 | 18 ஐப்பசி பராபவ வருடம்

டிஎன்பிஎஸ்சி தேர்வுகள் மீது இளைஞர்களுக்கு நம்பிக்கை குறைந்து வருகிறதா? அண்ணாமலை ஆதங்கம்

டிஎன்பிஎஸ்சி தேர்வுகள் மீது இளைஞர்களுக்கு நம்பிக்கை குறைந்து வருகிறதா? அண்ணாமலை ஆதங்கம்

தமிழகத்தில் அரசுப் பணியில் சேர வேண்டும் என்பது லட்சக்கணக்கான இளைஞர்களின் கனவாக உள்ளது. இந்தக் கனவை நிறைவேற்றுவதற்கான முக்கிய வாய்ப்பாகக் கருதப்படும் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் (TNPSC) மீதான நம்பிக்கை இளைஞர்களிடையே குறைந்து வருகிறதா என்ற கவலையை வி தி லீடர்ஸ் அமைப்பின் நிறுவனர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், டிஎன்பிஎஸ்சி குரூப்-4 தேர்வுக்கு விண்ணப்பிப்பவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து சரிந்து வருவதைச் சுட்டிக்காட்டியுள்ளார். அதன்படி, 2022-ம் ஆண்டு குரூப்-4 தேர்வுக்கு 22.06 லட்சம் பேர் விண்ணப்பித்திருந்தனர். இந்த எண்ணிக்கை 2024-ல் 20.37 லட்சமாகவும், 2025-ல் 13.89 லட்சமாகவும் குறைந்துள்ளது. நடப்பாண்டில் இதுவரை வெறும் 9.80 லட்சம் பேர் மட்டுமே விண்ணப்பித்துள்ளனர். கடந்த நான்கு ஆண்டுகளில் விண்ணப்பதாரர்களின் எண்ணிக்கை சுமார் 56 சதவீதம் குறைந்திருப்பது கவனிக்க வேண்டிய விஷயம் என அண்ணாமலை குறிப்பிட்டுள்ளார். அரசுப் பணிக்காக பல ஆண்டுகளாகத் தங்களது நேரம், உழைப்பு மற்றும் பணத்தைச் செலவிட்டு தயாராகும் இளைஞர்களுக்கு, உரிய நேரத்தில் தேர்வு முடிவுகளும் வேலைவாய்ப்புகளும் கிடைப்பதில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார். தேர்வு முடிவுகளை வெளியிடுவதில் ஏற்படும் தாமதம், தேர்ச்சி பெற்றவர்களுக்குப் பணி நியமனம் வழங்குவதில் காலதாமதம், தேர்வு நடைமுறைகளின் வெளிப்படைத்தன்மை குறித்த சந்தேகங்கள், முறைகேடு புகார்கள் உள்ளிட்டவை தேர்வர்களின் நம்பிக்கையைப் பாதிப்பதாகக் கூறியுள்ளார்.மேலும், கடந்த காலங்களில் அமைச்சர்கள் உள்ளிட்டோர் பணம் பெற்றுக்கொண்டு அரசுப் பணிகளை வழங்கியதாக எழுந்த குற்றச்சாட்டுகளையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Advertisement
இளைஞர்களின் அரசுப் பணி கனவுகளை நிறைவேற்ற வேண்டிய தேர்வாணையத்தின் மீதே நம்பிக்கை குறைவது கவலைக்குரிய நிலை என அண்ணாமலை தெரிவித்துள்ளார். குரூப்-4 தேர்வுக்கு விண்ணப்பிப்பவர்களின் எண்ணிக்கை ஆண்டுதோறும் வேகமாகக் குறைவதற்கான காரணங்களை தமிழக அரசு ஆராய வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார். அரசுப் பணியாளர் தேர்வுகள் மீதும் பணி நியமனங்கள் மீதும் இளைஞர்கள் மீண்டும் நம்பிக்கை கொள்ளும் வகையில் அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார். காலியாக உள்ள அரசுப் பணியிடங்களைத் தாமதமின்றி நிரப்புவதுடன், தேர்வு நடைமுறைகளில் முழுமையான வெளிப்படைத்தன்மையை உறுதி செய்வதே இளைஞர்களின் நம்பிக்கையை மீட்டெடுப்பதற்கான முக்கிய வழி என்றும் தனது பதிவில் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

மதிப்பீடு மற்றும் கருத்துகள்
இந்த செய்தி உங்களுக்கு எவ்வளவு பயனுள்ளதாக இருந்தது?
நடப்பு விலைகள்
🥇 Gold ₹13,135
🥈 Silver ₹220.00
⛽ Petrol ₹107.76
🛢️ Diesel ₹99.55
TNTAM/26/A7738
📰 நிருபர் ஆக
🏠 முகப்பு தமிழ்நாடு அரசியல் இந்தியா உலகம் சினிமா விளையாட்டு தொழில்நுட்பம் ஆன்மீகம் வேலை & கல்வி வணிகம் சுகாதாரம் வீடியோ சிறப்புக் கட்டுரைகள்
🔍 தேடல் ✍️ கட்டுரை எழுது ℹ️ தகவல் மையம்
📰 செய்தி பதிவிடு