Skip to main content
தினத்துளிர்
🌤️ —°C
வெள்ளி | 11 செப்டம்பர் 2026 | 26 ஆவணி பராபவ வருடம்

முக்கொம்பு மேலணைக்கு நீர்வரத்து 9,200 கனஅடியாக உயர்வு

முக்கொம்பு மேலணைக்கு நீர்வரத்து 9,200 கனஅடியாக உயர்வு

முக்கொம்பு மேலணைக்கு வரும் நீரின் அளவு 9,200 கனஅடியாக அதிகரித்துள்ளது. அதிகளவில் தண்ணீர் வரத்து காணப்படுவதால், மேலணை பகுதி கடல் போல் காட்சியளிக்கிறது. மேட்டூர் அணையில் இருந்து ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 12-ம் தேதி டெல்டா பாசனத்துக்காக தண்ணீர் திறப்பது வழக்கம். ஆனால் இந்த ஆண்டு ஜூன் மாதத்தில் மேட்டூர் அணையில் போதிய நீர் இருப்பு இல்லாததால் குறுவை சாகுபடிக்காக தண்ணீர் திறக்கப்படவில்லை. இதனிடையே, காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழையின் காரணமாக கர்நாடகா தமிழகத்துக்கு குறைந்த அளவில் தண்ணீர் திறந்தது. இதன் மூலம் மேட்டூர் அணையின் நீர்மட்டம் படிப்படியாக உயர்ந்தது. இதையடுத்து, கடந்த 1-ம் தேதி சம்பா சாகுபடிக்காக மேட்டூர் அணையில் இருந்து முதல்-அமைச்சர் விஜய் தண்ணீர் திறந்து வைத்தார்.

Advertisement
தொடக்கமாக வினாடிக்கு 7,000 கனஅடி நீர் திறக்கப்பட்டது. இந்த நீர் கடந்த 3-ம் தேதி மாயனூர் கதவணையை சென்றடைந்தது. அங்கிருந்து காவிரியில் வினாடிக்கு 2,050 கனஅடி நீர் திறந்து விடப்பட்டது. இந்த நீர் கடந்த 4-ம் தேதி காலை முக்கொம்பு மேலணையை வந்தடைந்தது. ஏற்கனவே 1,500 கனஅடி நீர் வந்து கொண்டிருந்த நிலையில், முக்கொம்பு மேலணைக்கான நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்தது. தற்போது முக்கொம்பு மேலணைக்கு நீர்வரத்து 9,200 கனஅடியாக உயர்ந்துள்ளது. வந்தடைந்த தண்ணீர் முழுவதும் காவிரியில் திறந்து விடப்பட்டது. அதிகரித்த நீர்வரத்து காரணமாக முக்கொம்பு மேலணை பகுதி கடல் போல் காட்சியளித்தது.

மதிப்பீடு மற்றும் கருத்துகள்
இந்த செய்தி உங்களுக்கு எவ்வளவு பயனுள்ளதாக இருந்தது?
நடப்பு விலைகள்
🥇 Gold ₹14,650
🥈 Silver ₹260.00
Petrol ₹108.47
🛢️ Diesel ₹100.32
தினத்துளிர்
📰 நிருபர் ஆக
🏠 முகப்பு தமிழ்நாடு அரசியல் இந்தியா உலகம் சினிமா விளையாட்டு தொழில்நுட்பம் ஆன்மீகம் வேலை & கல்வி வணிகம் சுகாதாரம் வீடியோ சிறப்புக் கட்டுரைகள்
🔍 தேடல் ✍️ கட்டுரை எழுது ℹ️ தகவல் மையம்
📰 செய்தி பதிவிடு