Skip to main content
தினத்துளிர்
🌤️ —°C
வியாழன் | 10 செப்டம்பர் 2026 | 25 ஆவணி பராபவ வருடம்

இடைத்தேர்தலில் யாருக்கு ஆதரவு? - கம்யூனிஸ்ட் கட்சிகள் நாளை முக்கிய முடிவு

இடைத்தேர்தலில் யாருக்கு ஆதரவு? - கம்யூனிஸ்ட் கட்சிகள் நாளை முக்கிய முடிவு

தமிழகத்தில் நடைபெற உள்ள இடைத்தேர்தலில் த.வெ.க.வுக்கு ஆதரவு அளிப்பதா, அல்லது தனித்துப் போட்டியிடுவதா என்பது குறித்து நாளை நடைபெறும் ஆலோசனைக் கூட்டத்தில் முடிவு எடுக்கப்படும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயலாளர் வீரபாண்டியன் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் காலியாக உள்ள 7 சட்டமன்ற தொகுதிகளில் மதுராந்தகம் மற்றும் தாராபுரம் ஆகிய 2 தொகுதிகளுக்கு மட்டும் அடுத்த மாதம் 6-ந்தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இந்த தேர்தலில் த.வெ.க., தி.மு.க., அ.தி.மு.க. மற்றும் நாம் தமிழர் கட்சி ஆகியவை போட்டியிடுகின்றன. சட்டசபை தேர்தல் முடிந்து 4 மாதங்களே ஆன நிலையில் இந்த இடைத்தேர்தல் நடைபெறுவதால், புதிதாக ஆட்சிப் பொறுப்பேற்றுள்ள த.வெ.க. உள்ளிட்ட கட்சிகளுக்கு இடையே போட்டி நிலவும் சூழல் உருவாகியுள்ளது. தி.மு.க. சார்பில் மதுராந்தகம் தொகுதிக்கு பரந்தாமனும், தாராபுரம் தொகுதிக்கு சுகன்யாவும் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர். த.வெ.க. சார்பில் மதுராந்தகத்தில் மரகதம் குமரவேலும், தாராபுரத்தில் சத்தியபாமாவும் களமிறக்கப்பட்டுள்ளனர். இவர்கள் இருவரும் இதற்கு முன்பு அ.தி.மு.க. சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர்கள். பின்னர் பதவியை ராஜினாமா செய்து த.வெ.க.வில் இணைந்தனர். இதற்கிடையே, த.வெ.க. அமைச்சரவையில் இடம்பெற்றுள்ள காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள் கட்சி மற்றும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஆகிய கட்சிகள் த.வெ.க.வுக்கு ஆதரவு தெரிவித்துள்ளன. ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோவும் த.வெ.க. தலைவர் விஜய்க்கு ஆதரவாக கருத்துகளை தெரிவித்து வருகிறார். மறுபுறம், த.வெ.க. அரசுக்கு வெளியிலிருந்து ஆதரவு அளித்து வரும் இரு கம்யூனிஸ்ட் கட்சிகள், அரசின் செயல்பாடுகள் குறித்து அவ்வப்போது விமர்சனங்களை முன்வைத்து வருகின்றன.

Advertisement
சட்டசபை கூட்டத்தின்போது முதல்-அமைச்சர் விஜய்யின் பதிலுரை மற்றும் அவரது உடல்மொழி தொடர்பாகவும் இரு கம்யூனிஸ்ட் கட்சிகளின் மாநில செயலாளர்கள் கண்டனம் தெரிவித்திருந்தனர். த.வெ.க. ஆட்சிக்கு 5 ஆண்டுகள் ஆதரவு அளிப்பீர்களா என்ற கேள்விக்கு, கட்சியின் நிலைப்பாட்டைப் பொறுத்தே அது அமையும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் செயலாளர் பெ.சண்முகம் ஏற்கனவே தெரிவித்திருந்தார். இந்த சூழலில், இடைத்தேர்தலில் இரு கம்யூனிஸ்ட் கட்சிகளின் நிலைப்பாடு என்ன என்பது குறித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயலாளர் வீரபாண்டியனிடம் கேட்கப்பட்டது. அதற்கு அவர் கூறுகையில், அறிவிக்கப்பட்டுள்ள 2 தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு அதிகளவில் இருப்பு இல்லை என்றார். அதேநேரத்தில், தமிழகத்தின் 40 மாவட்டங்களில் இடதுசாரி கட்சிகளுக்கு வாக்குகள் இருப்பதாக தெரிவித்தார். மதுராந்தகம் மற்றும் தாராபுரம் தொகுதிகளில் போட்டியிடுவதா அல்லது கூட்டணி கட்சியான த.வெ.க.வுக்கு ஆதரவு அளிப்பதா என்பது குறித்து நாளை (வெள்ளிக்கிழமை) மாலை நடைபெறும் கூட்டத்தில் முடிவு செய்யப்படும் என்றும் அவர் கூறினார். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில நிர்வாகிகள் பங்கேற்க உள்ளனர். இரு இடதுசாரி கட்சிகளும் இணைந்து ஆலோசித்து முடிவு எடுத்து அதனை அறிவிக்கும் என வீரபாண்டியன் தெரிவித்தார்.

மதிப்பீடு மற்றும் கருத்துகள்
இந்த செய்தி உங்களுக்கு எவ்வளவு பயனுள்ளதாக இருந்தது?
நடப்பு விலைகள்
🥇 Gold ₹14,650
🥈 Silver ₹260.00
Petrol ₹108.47
🛢️ Diesel ₹100.32
தினத்துளிர்
📰 நிருபர் ஆக
🏠 முகப்பு தமிழ்நாடு அரசியல் இந்தியா உலகம் சினிமா விளையாட்டு தொழில்நுட்பம் ஆன்மீகம் வேலை & கல்வி வணிகம் சுகாதாரம் வீடியோ சிறப்புக் கட்டுரைகள்
🔍 தேடல் ✍️ கட்டுரை எழுது ℹ️ தகவல் மையம்
📰 செய்தி பதிவிடு