Skip to main content
தினத்துளிர்
TNTAM/26/A7738
🌤️ —°C
புதன் | 23 செப்டம்பர் 2026 | 7 புரட்டாசி பராபவ வருடம்

“மீராபாய் சானுவின் உறுதி தேசத்துக்கு உத்வேகம்” - பிரதமர் மோடி பெருமிதம்

“மீராபாய் சானுவின் உறுதி தேசத்துக்கு உத்வேகம்” - பிரதமர் மோடி பெருமிதம்

ஆசிய விளையாட்டுப் போட்டி பளுதூக்குதலில் வெள்ளிப் பதக்கம் வென்ற இந்திய வீராங்கனை மீராபாய் சானுவுக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். ஜப்பானின் அய்ச்சி மாகாணத்தில் உள்ள நகோயா நகரில் 20-வது ஆசிய விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இதில் இந்தியா, ஜப்பான், சீனா, தென்கொரியா உள்ளிட்ட 45 நாடுகளைச் சேர்ந்த சுமார் 11 ஆயிரம் வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர். இதில் பெண்களுக்கான 49 கிலோ எடைப்பிரிவு பளுதூக்குதல் போட்டியில் இந்தியாவின் நட்சத்திர வீராங்கனை மீராபாய் சானு 198 கிலோ எடையைத் தூக்கி வெள்ளிப் பதக்கம் கைப்பற்றினார். இதன் மூலம் ஆசிய விளையாட்டுப் போட்டியில் தனது முதல் பதக்கத்தை அவர் வென்றுள்ளார்.

Advertisement
ஆசிய விளையாட்டில் இதற்கு முன்பு பதக்கம் வெல்லாத மீராபாய் சானு, தற்போது வெள்ளிப் பதக்கம் மூலம் தனது பதக்கப் பட்டியலைத் தொடங்கியுள்ளார். இதையடுத்து மீராபாய் சானுவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், 49 கிலோ எடைப்பிரிவு பளுதூக்குதலில் வெள்ளிப் பதக்கம் வென்ற மீராபாய் சானுவுக்கு பாராட்டு தெரிவித்துள்ளார். மேலும், அவரது உறுதியும் விடாமுயற்சியும் நாட்டுக்கு உத்வேகம் அளிப்பதாகவும், அவரது சாதனையால் இந்தியா பெருமை கொள்வதாகவும் குறிப்பிட்டுள்ளார். எதிர்கால முயற்சிகளிலும் அவர் வெற்றி பெற பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

மதிப்பீடு மற்றும் கருத்துகள்
இந்த செய்தி உங்களுக்கு எவ்வளவு பயனுள்ளதாக இருந்தது?
நடப்பு விலைகள்
🥇 Gold ₹14,135
🥈 Silver ₹255.00
Petrol ₹107.76
🛢️ Diesel ₹99.55
TNTAM/26/A7738
📰 நிருபர் ஆக
🏠 முகப்பு தமிழ்நாடு அரசியல் இந்தியா உலகம் சினிமா விளையாட்டு தொழில்நுட்பம் ஆன்மீகம் வேலை & கல்வி வணிகம் சுகாதாரம் வீடியோ சிறப்புக் கட்டுரைகள்
🔍 தேடல் ✍️ கட்டுரை எழுது ℹ️ தகவல் மையம்
📰 செய்தி பதிவிடு