நாடு முழுவதும் நாளை தீபாவளிப் பண்டிகை உற்சாகமாகக் கொண்டாடப்பட உள்ள நிலையில், பொதுமக்களுக்கு அரசியல் கட்சித் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில், பிரதமர் நரேந்திர மோடியும் நாட்டு மக்களுக்கு தீபாவளி வாழ்த்துகளைப் பகிர்ந்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், இந்தியாவின் பாரம்பரியங்களைப் போற்றுவதோடு, மக்களிடையே ஒற்றுமையை வலுப்படுத்தும் முக்கியமான பண்டிகையாக தீபாவளி விளங்குவதாகக் குறிப்பிட்டுள்ளார். மேலும், இருளை ஒளியும், தீமையை நன்மையும், நம்பிக்கையின்மையை நம்பிக்கையும் வெல்வதைப் பறைசாற்றும் திருநாளாக தீபாவளி கொண்டாடப்படுவதாக அவர் தெரிவித்துள்ளார்.
Advertisement
ஒவ்வொரு குடும்பத்திலும் மகிழ்ச்சியும் செழிப்பும் நிறைய வேண்டும் என்றும், இந்தப் பண்டிகைக் காலம் அனைவரிடமும் அன்பையும் கருணையையும் வளர்த்து, ஒளிமயமான எதிர்காலத்தை உருவாக்குவதற்கான ஊக்கத்தை அளிக்க வேண்டும் என்றும் மோடி வாழ்த்தியுள்ளார். வளமான, வளர்ச்சியடைந்த இந்தியாவை உருவாக்குவதற்கு மக்கள் அனைவரும் புதிய உற்சாகத்துடனும் உறுதியுடனும் தொடர்ந்து செயல்பட வேண்டும் என்றும் தனது வாழ்த்துச் செய்தியில் பிரதமர் மோடி வலியுறுத்தியுள்ளார்.