Skip to main content
தினத்துளிர்
TNTAM/26/A7738
🌤️ —°C
சனி | 31 அக்டோபர் 2026 | 14 ஐப்பசி பராபவ வருடம்

தவெக ஆட்சி மீது பெண்கள் பெரும் கோபம் - மு.க.ஸ்டாலின்

தவெக ஆட்சி மீது பெண்கள் பெரும் கோபம் - மு.க.ஸ்டாலின்

தமிழகத்தில் நிலவும் விலைவாசி உயர்வு, பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் உள்ளிட்ட பிரச்சினைகளால் பெண்கள் தவெக ஆட்சி மீது அதிருப்தியில் இருப்பதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் சட்டம், ஒழுங்கு பாதிக்கப்பட்டுள்ளதாகவும், கொலை, கொள்ளை உள்ளிட்ட குற்றச் சம்பவங்கள் தொடர்ந்து நடைபெறுவதாகவும் குற்றம்சாட்டி, பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும், விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி திமுக மகளிர் அணி சார்பில் இன்று மாநிலம் முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன. இந்தப் போராட்டம் குறித்து திமுக தலைவரும் முன்னாள் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் தளப் பதிவில் கூறியிருப்பதாவது: தமிழகம் முழுவதும் நடைபெற்ற மகளிர் அணியின் கண்டனப் போராட்டங்களில், திமுகவைச் சாராத பெண்களும் அதிக எண்ணிக்கையில் பங்கேற்று தங்களது பிரச்சினைகளையும் அதிருப்தியையும் வெளிப்படுத்தியுள்ளனர்.

Advertisement
வீட்டு மின்சாரக் கட்டணம் மற்றும் மளிகைப் பொருட்களுக்கான செலவுகளைப் பார்க்கும்போதே தற்போதைய ஆட்சி மீது பெண்களுக்கு கடும் கோபம் ஏற்படுகிறது. விலைவாசி உயர்வால் ஏழை மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். இதற்கிடையே, பெண்களுக்கு எதிரான குற்றங்களும் அதிகரித்து வருகின்றன. குழந்தைகளை வீட்டுக்கு வெளியே விளையாட அனுப்புவதற்குக்கூட பெற்றோர் அச்சப்படும் வகையில் சட்டம், ஒழுங்கு நிலைமை இருப்பதை தினந்தோறும் வெளியாகும் செய்திகள் உணர்த்துகின்றன. அரசை விமர்சிப்பவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதிலும், இடைத்தேர்தல் நடைபெறவுள்ள தொகுதிகளில் கவனம் செலுத்துவதிலும் முதலமைச்சர் காட்டும் அக்கறையை ஆட்சி நிர்வாகத்திலும் செலுத்த வேண்டும் என்பதற்கான எச்சரிக்கையைத் தமிழகப் பெண்கள் தங்களது போராட்டத்தின் மூலம் வெளிப்படுத்தியுள்ளனர். பெண்களின் இந்தக் குரலுக்குச் செவிசாய்த்து உரிய நடவடிக்கை எடுப்பது அரசின் கடமை என்று மு.க.ஸ்டாலின் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

மதிப்பீடு மற்றும் கருத்துகள்
இந்த செய்தி உங்களுக்கு எவ்வளவு பயனுள்ளதாக இருந்தது?
நடப்பு விலைகள்
🥇 Gold ₹13,135
🥈 Silver ₹220.00
⛽ Petrol ₹107.76
🛢️ Diesel ₹99.55
TNTAM/26/A7738
📰 நிருபர் ஆக
🏠 முகப்பு தமிழ்நாடு அரசியல் இந்தியா உலகம் சினிமா விளையாட்டு தொழில்நுட்பம் ஆன்மீகம் வேலை & கல்வி வணிகம் சுகாதாரம் வீடியோ சிறப்புக் கட்டுரைகள்
🔍 தேடல் ✍️ கட்டுரை எழுது ℹ️ தகவல் மையம்
📰 செய்தி பதிவிடு