Skip to main content
தினத்துளிர்
TNTAM/26/A7738
🌤️ —°C
சனி | 10 அக்டோபர் 2026 | 24 புரட்டாசி பராபவ வருடம்

மிலாது நபியை முன்னிட்டு நாளை டாஸ்மாக் கடைகள் மூடல்: சென்னை கலெக்டர் அறிவிப்பு

மிலாது நபியை முன்னிட்டு நாளை டாஸ்மாக் கடைகள் மூடல்: சென்னை கலெக்டர் அறிவிப்பு

மிலாது நபி தினத்தை முன்னிட்டு சென்னை மாவட்டத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் மதுபானக் கடைகளும் நாளை மூடப்பட வேண்டும் என மாவட்ட கலெக்டர் மாலதி ஹெலன் அறிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், நாளை (புதன்கிழமை) சென்னை மாவட்டத்தில் செயல்படும் அனைத்து டாஸ்மாக் கடைகள் மற்றும் அவற்றுடன் இணைந்த பார்கள் மூடப்பட்டிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும், எப்.எல்.2 உரிமம் பெற்ற பார்கள், எப்.எல்.3 உரிமம் கொண்ட ஓட்டல்களின் பார்கள், எப்.எல்.3 (ஏ), எப்.எல்.3 (ஏ.ஏ.) முதல் எப்.எல்.11 வரை உரிமம் பெற்ற மதுபான விற்பனை நிலையங்கள் மற்றும் மதுபானக் கூடங்களும் செயல்படக்கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது.இந்த உத்தரவை மீறி மதுபானம் விற்பனை செய்தால், சம்பந்தப்பட்டவர்கள் மீது மதுபான விற்பனை விதிகளின்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கலெக்டர் எச்சரித்துள்ளார்.

மதிப்பீடு மற்றும் கருத்துகள்
இந்த செய்தி உங்களுக்கு எவ்வளவு பயனுள்ளதாக இருந்தது?
நடப்பு விலைகள்
🥇 Gold ₹13,710
🥈 Silver ₹245.00
⛽ Petrol ₹107.76
🛢️ Diesel ₹99.55
TNTAM/26/A7738
📰 நிருபர் ஆக
🏠 முகப்பு தமிழ்நாடு அரசியல் இந்தியா உலகம் சினிமா விளையாட்டு தொழில்நுட்பம் ஆன்மீகம் வேலை & கல்வி வணிகம் சுகாதாரம் வீடியோ சிறப்புக் கட்டுரைகள்
🔍 தேடல் ✍️ கட்டுரை எழுது ℹ️ தகவல் மையம்
📰 செய்தி பதிவிடு