Skip to main content
தினத்துளிர்
TNTAM/26/A7738
🌤️ —°C
சனி | 10 அக்டோபர் 2026 | 24 புரட்டாசி பராபவ வருடம்

மதுரை மாவட்டத்தில் 130 ஊராட்சிகள் காசநோய் இல்லா ஊராட்சிகளாகத் தேர்வு – மாவட்ட ஆட்சித்தலைவர் பாராட்டு; ‘ஜோஷ்’ (JOSH) அணிகள் தொடக்கம்

மதுரை மாவட்டத்தில் 130 ஊராட்சிகள் காசநோய் இல்லா ஊராட்சிகளாகத் தேர்வு – மாவட்ட ஆட்சித்தலைவர் பாராட்டு; ‘ஜோஷ்’ (JOSH) அணிகள் தொடக்கம்

மதுரை, அக்டோபர் 8, 2026: மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறையின் சார்பில், தேசிய காசநோய் ஒழிப்புத் திட்டத்தின் கீழ், காசநோய் இல்லா ஊராட்சிகளாகத் தேர்வு செய்யப்பட்ட 130 ஊராட்சிகளுக்கான பாராட்டு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில், தேர்வு செய்யப்பட்ட ஊராட்சிகளுடன் தொடர்புடைய வட்டார மருத்துவ அலுவலர்களுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் நிஷாந்த்கிருஷ்ணா பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கி சிறப்பித்தார். மேலும், காசநோய் ஒழிப்புப் பணிகளைத் தீவிரப்படுத்தும் நோக்கில் ‘ஜோஷ்’ (JOSH) அணிகளும் தொடங்கி வைக்கப்பட்டன. இந்திய அரசின் சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகத்தின் மத்திய காசநோய்ப் பிரிவின் சார்பில், 2023-ஆம் ஆண்டு முதல் ‘காசநோய் இல்லா ஊராட்சி’ (TB Free Panchayat) என்ற முன்னோடித் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

Advertisement
கிராமப்புறங்களில் காசநோயைக் கட்டுப்படுத்தி, படிப்படியாக முற்றிலும் ஒழிப்பதை இலக்காகக் கொண்டு இத்திட்டம் தீவிரமாகச் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் கீழ், காசநோய் தடுப்பு, ஆரம்பகாலக் கண்டறிதல் மற்றும் சிகிச்சை தொடர்பான விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்தி, காசநோய் இல்லாத சமூகத்தை உருவாக்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஹரிஷ் - மதுரை மாவட்ட செய்தியாளர்

மதிப்பீடு மற்றும் கருத்துகள்
இந்த செய்தி உங்களுக்கு எவ்வளவு பயனுள்ளதாக இருந்தது?
நடப்பு விலைகள்
🥇 Gold ₹13,710
🥈 Silver ₹245.00
⛽ Petrol ₹107.76
🛢️ Diesel ₹99.55
TNTAM/26/A7738
📰 நிருபர் ஆக
🏠 முகப்பு தமிழ்நாடு அரசியல் இந்தியா உலகம் சினிமா விளையாட்டு தொழில்நுட்பம் ஆன்மீகம் வேலை & கல்வி வணிகம் சுகாதாரம் வீடியோ சிறப்புக் கட்டுரைகள்
🔍 தேடல் ✍️ கட்டுரை எழுது ℹ️ தகவல் மையம்
📰 செய்தி பதிவிடு