மயிலாடுதுறை மாவட்டம் பொறையாறு அருகே, மளிகைக் கடையில் புகையிலைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்ட வழக்கில், கடை உரிமையாளரிடம் ரூ.50 ஆயிரம் லஞ்சம் பெற்றதாகக் கூறப்படும் போலீஸ் ஏட்டு பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். புகையிலைப் பொருட்கள் தொடர்பான வழக்கில் கைது செய்யப்பட்ட கடை உரிமையாளரை ஜாமீனில் விடுவிப்பதற்காக, இடைத்தரகர் ஒருவர் மூலம் ரூ.50 ஆயிரம் லஞ்சம் பெற்றதாக பொறையாறு போலீஸ் நிலையத்தில் பணியாற்றிய ஏட்டு அன்பரசன் (45) மீது புகார் எழுந்தது. இந்த விவகாரம் குறித்து கடை உரிமையாளர் தனது வழக்கறிஞர் சங்கமித்திரனிடம் தெரிவித்தபோது, லஞ்சப் பணம் கைமாறிய தகவல் தெரியவந்தது.
Advertisement
இதையடுத்து, முதலமைச்சர் தனிப்பிரிவு மற்றும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டிடம் புகார் அளிக்கப்பட்டது. புகார் தொடர்பாக நடத்தப்பட்ட விசாரணையில், ஏட்டு அன்பரசன் லஞ்சம் பெற்றது உறுதி செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து மயிலாடுதுறை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சினேகாபிரியா, அன்பரசனை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார்.