Skip to main content
🌤️ —°C
செவ்வாய் | 18 ஆகஸ்ட் 2026 | 2 ஆவணி பராபவ வருடம்

மராட்டியம்: பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் - அதிர்ச்சி சம்பவம்

மராட்டியம்: பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் - அதிர்ச்சி சம்பவம்
மராட்டிய மாநிலம் நாக்பூரில் அரசு மற்றும் தனியார் பள்ளிகள் ஏராளமாக செயல்பட்டு வருகின்றன. இந்நிலையில், அங்குள்ள 12 பள்ளிகளுக்கு இன்று காலை மர்ம நபர் ஒருவர் இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.பள்ளிகளின் அதிகாரப்பூர்வ இ-மெயில் முகவரிகளுக்கு வந்த தகவலில், பள்ளி வளாகங்களில் வெடிகுண்டுகள் வைக்கப்பட்டுள்ளதாகவும், அவை வரும் 31-ம் தேதி வெடிக்கும் என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது.இதனால் அதிர்ச்சியடைந்த பள்ளி நிர்வாகத்தினர் உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
Advertisement
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு, மாணவ-மாணவிகள் அனைவரும் வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.தகவலறிந்து விரைந்து வந்த போலீசார், 12 பள்ளிகளிலும் தீவிர சோதனை மேற்கொண்டனர். இந்த சோதனையில் வெடிகுண்டுகள் எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை. இதையடுத்து, மிரட்டல் வெறும் புரளி என்பது தெரியவந்தது.இதனைத் தொடர்ந்து, 12 பள்ளிகளுக்கும் இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுத்த மர்ம நபர் யார் என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
மதிப்பீடு மற்றும் கருத்துகள்
இந்த செய்தி உங்களுக்கு எவ்வளவு பயனுள்ளதாக இருந்தது?
நடப்பு விலைகள்
🥇 Gold ₹13,230
🥈 Silver ₹240.00
Petrol ₹108.47
🛢️ Diesel ₹100.32
தினத்துளிர்
📰 நிருபர் ஆக
🏠 முகப்பு தமிழ்நாடு இந்தியா உலகம் சினிமா விளையாட்டு தொழில்நுட்பம் ஆன்மீகம் வேலை & கல்வி வணிகம் சுகாதாரம் வீடியோ சிறப்புக் கட்டுரைகள் 📸 பட செய்திகள்
📰 இ-பேப்பர் 🔍 தேடல் ✍️ கட்டுரை எழுது ℹ️ தகவல் மையம்
📰 செய்தி பதிவிடு