மயிலாடுதுறை, பாலக்காடு, சரளப்பள்ளி ரெயில் சேவைகளில் மாற்றம்
சேலம் ரெயில்வே கோட்டத்துக்குட்பட்ட கரூர்–மூர்த்திபாளையம் இடையே தண்டவாள பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால், சில ரெயில் சேவைகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.அதன்படி, பாலக்காடு டவுன்–திருச்சி எக்ஸ்பிரஸ் (16844) இன்று (சனிக்கிழமை) மற்றும் வருகிற 8-ந்தேதி ஆகிய இரு நாட்களிலும் புகளூர் வரை மட்டுமே இயக்கப்படும். இதனால் அந்த நாட்களில் ரெயில் திருச்சி செல்லாது. பராமரிப்பு பணிகள் நிறைவடைந்த பின்னர், புகளூரில் இருந்து திருச்சிக்கு முன்பதிவு இல்லாத சிறப்பு ரெயிலாக இயக்கப்படும்.இதனிடையே, திருச்சி–சரளப்பள்ளி எக்ஸ்பிரஸ் (17078) ரெயிலின் சில நிலையங்களுக்கான நேரமும் நேற்று முதல் மாற்றப்பட்டுள்ளது. குண்டூர் ரெயில் நிலையத்தை பிற்பகல் 2.40 மணிக்கு சென்றடையும் ரெயில், 2.50 மணிக்கு அங்கிருந்து புறப்படும். சட்டேனபள்ளிக்கு மாலை 3.19 மணிக்கு வந்து, 3.20 மணிக்கு புறப்படும். நதிகுடே ரெயில் நிலையத்தை மாலை 3.59 மணிக்கு சென்றடையும் ரெயில், 4 மணிக்கு அங்கிருந்து புறப்படும்.தஞ்சை யார்டில் நடைபெற உள்ள பொறியியல் பணிகள் காரணமாக திருச்சி–மயிலாடுதுறை மெமு எக்ஸ்பிரஸ் (16834) சேவையிலும் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.