மயிலாடுதுறை, பாலக்காடு, சரளப்பள்ளி ரெயில் சேவைகளில் மாற்றம்
படம் தயாராகிறது… Generating image…
Advertisement
தினத்துளிர்
Advertisement

05 Sep 2026 www.thinathulir.com

மயிலாடுதுறை, பாலக்காடு, சரளப்பள்ளி ரெயில் சேவைகளில் மாற்றம்

மயிலாடுதுறை, பாலக்காடு, சரளப்பள்ளி ரெயில் சேவைகளில் மாற்றம்

சேலம் ரெயில்வே கோட்டத்துக்குட்பட்ட கரூர்–மூர்த்திபாளையம் இடையே தண்டவாள பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால், சில ரெயில் சேவைகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.அதன்படி, பாலக்காடு டவுன்–திருச்சி எக்ஸ்பிரஸ் (16844) இன்று (சனிக்கிழமை) மற்றும் வருகிற 8-ந்தேதி ஆகிய இரு நாட்களிலும் புகளூர் வரை மட்டுமே இயக்கப்படும். இதனால் அந்த நாட்களில் ரெயில் திருச்சி செல்லாது. பராமரிப்பு பணிகள் நிறைவடைந்த பின்னர், புகளூரில் இருந்து திருச்சிக்கு முன்பதிவு இல்லாத சிறப்பு ரெயிலாக இயக்கப்படும்.இதனிடையே, திருச்சி–சரளப்பள்ளி எக்ஸ்பிரஸ் (17078) ரெயிலின் சில நிலையங்களுக்கான நேரமும் நேற்று முதல் மாற்றப்பட்டுள்ளது. குண்டூர் ரெயில் நிலையத்தை பிற்பகல் 2.40 மணிக்கு சென்றடையும் ரெயில், 2.50 மணிக்கு அங்கிருந்து புறப்படும். சட்டேனபள்ளிக்கு மாலை 3.19 மணிக்கு வந்து, 3.20 மணிக்கு புறப்படும். நதிகுடே ரெயில் நிலையத்தை மாலை 3.59 மணிக்கு சென்றடையும் ரெயில், 4 மணிக்கு அங்கிருந்து புறப்படும்.தஞ்சை யார்டில் நடைபெற உள்ள பொறியியல் பணிகள் காரணமாக திருச்சி–மயிலாடுதுறை மெமு எக்ஸ்பிரஸ் (16834) சேவையிலும் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இன்று மற்றும் வருகிற 8-ந்தேதி, திருச்சியில் இருந்து மாலை 4.20 மணிக்கு புறப்படும் இந்த ரெயில், ஆலக்குடி ரெயில் நிலையத்தில் கூடுதலாக 30 நிமிடங்கள் நிறுத்தப்படும்.மேலும், மதுரை கோட்டத்தில் நடைபெறும் பராமரிப்பு பணிகளால் நாகர்கோவில்–கட்ச்குடா வாராந்திர எக்ஸ்பிரஸ் (16354) ரெயிலின் வழித்தடத்திலும் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இன்று காலை 9.25 மணிக்கு நாகர்கோவிலில் இருந்து புறப்படும் இந்த ரெயில், மதுரை மற்றும் திண்டுக்கல் வழியாக செல்லாமல் விருதுநகர், மானாமதுரை, காரைக்குடி, திருச்சி வழியாக இயக்கப்படும்.இந்த ரெயில் மானாமதுரை மற்றும் காரைக்குடி ரெயில் நிலையங்களில் கூடுதலாக நின்று செல்லும்.