Skip to main content
தினத்துளிர்
TNTAM/26/A7738
🌤️ —°C
சனி | 14 நவம்பர் 2026 | 28 ஐப்பசி பராபவ வருடம்

மும்பையில் ராக்கெட்,வாண வேடிக்கை பட்டாசு வெடிக்கத் தடை

மும்பையில் ராக்கெட்,வாண வேடிக்கை பட்டாசு வெடிக்கத் தடை

தீபாவளி பண்டிகையின்போது மும்பையின் பல்வேறு பகுதிகளில் அடுத்தடுத்து தீ விபத்துகள் ஏற்பட்டதைத் தொடர்ந்து, ராக்கெட் மற்றும் வானில் பறந்து சென்று வெடிக்கும் வகையிலான பட்டாசுகளைப் பயன்படுத்த மும்பை பேரிடர் மேலாண்மை ஆணையம் தடை விதித்துள்ளது. இந்த உத்தரவு குடியிருப்புக் கட்டடங்கள், வீடுகளின் மொட்டை மாடிகள், பால்கனிகள் மற்றும் குடிசைப் பகுதிகள் என நகரின் அனைத்துப் பகுதிகளுக்கும் பொருந்தும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தீபாவளி இரவில் மட்டும் மும்பையின் வெவ்வேறு இடங்களில் மூன்று பெரிய தீ விபத்துகள் நிகழ்ந்துள்ளன. இந்தச் சம்பவங்களில் குடிசைகள், கடைகள் மற்றும் வாகனப் பழுதுபார்க்கும் நிலையம் உள்ளிட்டவை தீக்கிரையாகி சேதமடைந்தன.

Advertisement
இந்தச் சம்பவங்களைத் தொடர்ந்து, மும்பை கூடுதல் மாநகராட்சி ஆணையர் பிரஜக்தா வர்மா-லவங்கரே உத்தரவின் பேரில் பட்டாசுகளுக்கான கட்டுப்பாடு அமல்படுத்தப்பட்டுள்ளது. ராக்கெட் மற்றும் வானவேடிக்கை பட்டாசுகள் வெடிக்கும்போது அவை வீடுகளின் மேற்கூரைகள், பால்கனிகள், ஜன்னல்கள் அல்லது தீப்பற்றக்கூடிய பொருட்கள் மீது விழ வாய்ப்புள்ளது. இதனால் தீ விபத்துகள் ஏற்படும் அபாயம் இருப்பதைக் கருத்தில் கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக உத்தரவில் விளக்கப்பட்டுள்ளது. இந்தத் தடை நவம்பர் 9ஆம் தேதி முதல் நவம்பர் 25ஆம் தேதி இரவு 11.59 மணி வரை அமலில் இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மதிப்பீடு மற்றும் கருத்துகள்
இந்த செய்தி உங்களுக்கு எவ்வளவு பயனுள்ளதாக இருந்தது?
நடப்பு விலைகள்
🥇 Gold ₹13,140
🥈 Silver ₹205.00
⛽ Petrol ₹107.76
🛢️ Diesel ₹99.55
TNTAM/26/A7738
📰 நிருபர் ஆக
🏠 முகப்பு தமிழ்நாடு அரசியல் இந்தியா உலகம் சினிமா விளையாட்டு தொழில்நுட்பம் ஆன்மீகம் வேலை & கல்வி வணிகம் சுகாதாரம் வீடியோ சிறப்புக் கட்டுரைகள்
🔍 தேடல் ✍️ கட்டுரை எழுது ℹ️ தகவல் மையம்
📰 செய்தி பதிவிடு