Skip to main content
தினத்துளிர்
TNTAM/26/A7738
🌤️ —°C
சனி | 26 செப்டம்பர் 2026 | 10 புரட்டாசி பராபவ வருடம்

மன்மோகன் சிங் 94-வது பிறந்தநாள்: சோனியா, ராகுல், கார்கே மரியாதை

மன்மோகன் சிங் 94-வது பிறந்தநாள்: சோனியா, ராகுல், கார்கே மரியாதை

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கின் 94-வது பிறந்தநாளை முன்னிட்டு, காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் அவருக்கு மரியாதை செலுத்தினர். இந்தியாவின் முன்னாள் பிரதமரான மன்மோகன் சிங், காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர். 2004 முதல் 2014-ம் ஆண்டு வரை தொடர்ந்து 10 ஆண்டுகள் நாட்டின் பிரதமராகப் பதவி வகித்தார். 1932-ம் ஆண்டு செப்டம்பர் 26-ம் தேதி பிறந்த அவர், 2024-ம் ஆண்டு டிசம்பர் 26-ம் தேதி தனது 92-வது வயதில் காலமானார்.

Advertisement
இந்நிலையில், மன்மோகன் சிங்கின் 94-வது பிறந்தநாள் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி, காங்கிரஸ் தலைவர்கள் அவரை நினைவுகூர்ந்து மரியாதை செலுத்தி வருகின்றனர். அதன்படி, காங்கிரஸ் மூத்த தலைவர்களான மல்லிகார்ஜுன கார்கே, சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தி ஆகியோர் டெல்லியில் உள்ள காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்த மன்மோகன் சிங்கின் புகைப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

மதிப்பீடு மற்றும் கருத்துகள்
இந்த செய்தி உங்களுக்கு எவ்வளவு பயனுள்ளதாக இருந்தது?
நடப்பு விலைகள்
🥇 Gold ₹14,010
🥈 Silver ₹250.00
⛽ Petrol ₹107.76
🛢️ Diesel ₹99.55
TNTAM/26/A7738
📰 நிருபர் ஆக
🏠 முகப்பு தமிழ்நாடு அரசியல் இந்தியா உலகம் சினிமா விளையாட்டு தொழில்நுட்பம் ஆன்மீகம் வேலை & கல்வி வணிகம் சுகாதாரம் வீடியோ சிறப்புக் கட்டுரைகள்
🔍 தேடல் ✍️ கட்டுரை எழுது ℹ️ தகவல் மையம்
📰 செய்தி பதிவிடு