மன்மோகன் சிங் 94-வது பிறந்தநாள்: சோனியா, ராகுல், கார்கே மரியாதை
படம் தயாராகிறது… Generating image…
PRGI : TNTAM/26/A7738 தினத்துளிர் தமிழ் - மதுரை
Advertisement
தினத்துளிர்
தமிழ் தினசரி நாளிதழ் - www.thinathulir.com
Advertisement
26 Sep 2026, சனி | மலர் - 01 | இதழ் - 07 | பக்கங்கள்-8 | விலை - ரூ .5/- 26 Sep 2026, Saturday | Vol-01 - Issue-07 | Pages 8 | Rs.5/-

மன்மோகன் சிங் 94-வது பிறந்தநாள்: சோனியா, ராகுல், கார்கே மரியாதை

மன்மோகன் சிங் 94-வது பிறந்தநாள்: சோனியா, ராகுல், கார்கே மரியாதை

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கின் 94-வது பிறந்தநாளை முன்னிட்டு, காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் அவருக்கு மரியாதை செலுத்தினர். இந்தியாவின் முன்னாள் பிரதமரான மன்மோகன் சிங், காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர். 2004 முதல் 2014-ம் ஆண்டு வரை தொடர்ந்து 10 ஆண்டுகள் நாட்டின் பிரதமராகப் பதவி வகித்தார். 1932-ம் ஆண்டு செப்டம்பர் 26-ம் தேதி பிறந்த அவர், 2024-ம் ஆண்டு டிசம்பர் 26-ம் தேதி தனது 92-வது வயதில் காலமானார். இந்நிலையில், மன்மோகன் சிங்கின் 94-வது பிறந்தநாள் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி, காங்கிரஸ் தலைவர்கள் அவரை நினைவுகூர்ந்து மரியாதை செலுத்தி வருகின்றனர். அதன்படி, காங்கிரஸ் மூத்த தலைவர்களான மல்லிகார்ஜுன கார்கே, சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தி ஆகியோர் டெல்லியில் உள்ள காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்த மன்மோகன் சிங்கின் புகைப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.