மின்சார பேருந்து சேவை; முதல்-அமைச்சர் விஜய் தொடங்கி வைத்தார்
சென்னையில் 2-ம் கட்டமாக அறிமுகப்படுத்தப்பட உள்ள 750 புதிய ஏ.சி. மின்சார பேருந்துகளின் சேவையை முதல்அமைச்சர்விஜய்இன்று(செவ்வாய்க்கிழமை)தொடங்கிவைத்தார்.சென்னையில் காற்று மாசுபாட்டைக் குறைக்கும் நடவடிக்கையாக, சென்னை மாநகர போக்குவரத்துக் கழகம் சார்பில் ஏற்கனவே முதல் கட்டமாக ரூ.697 கோடி மதிப்பில் 625 தாழ்தள மின்சார பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. இவை வியாசர்பாடி, பெரும்பாக்கம், பூந்தமல்லி, சென்டிரல் பணிமனை மற்றும் தண்டையார்பேட்டை-1 ஆகிய 5 பணிமனைகளில் இருந்து இயக்கப்படுகின்றன.இதன் தொடர்ச்சியாக, 2-ம் கட்டத்தில் 750 புதிய தாழ்தள குளிர்சாதன வசதி கொண்ட மின்சார பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.
ஆலந்தூர், சென்டிரல் பணிமனை-2, பெரம்பூர், பாடியநல்லூர், ஆவடி, கே.கே.நகர் மற்றும் அய்யப்பன்தாங்கல் ஆகிய 7 பணிமனைகளில் இருந்து இந்த பேருந்துகள் சேவையில் ஈடுபடுத்தப்பட உள்ளன.இதற்கான தொடக்க நிகழ்ச்சி சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது. அங்கு மின்சார பேருந்துகளின் சேவையை முதல்-அமைச்சர் விஜய் கொடியசைத்து தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் போக்குவரத்துத்துறை அமைச்சர் தமிழன் பார்த்திபன், தலைமைச் செயலாளர் சாய்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.தொடர்ந்து மின்சார ஏ.சி. பேருந்தில் பயணம் செய்த முதல்-அமைச்சர் விஜய், அதன் ஓட்டுநர் மற்றும் நடத்துநரிடம் கலந்துரையாடினார்.