Skip to main content
தினத்துளிர்
TNTAM/26/A7738
🌤️ —°C
சனி | 14 நவம்பர் 2026 | 28 ஐப்பசி பராபவ வருடம்

மதுரை தனிஷ்க் நகைக்கடை கொள்ளை; இன்ஸ்டா பிரபலம் உள்பட 2 பேர் கைது

மதுரை தனிஷ்க் நகைக்கடை கொள்ளை; இன்ஸ்டா பிரபலம் உள்பட 2 பேர் கைது

மதுரை தனிஷ்க் நகைக்கடையில் ரூ.21 கோடி மதிப்பிலான தங்கம் மற்றும் வைர நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக, இன்ஸ்டாகிராம் பிரபலம் மீனாட்சி உள்பட இருவரை போலீசார் கைது செய்துள்ளனர். அவர்களிடம் இருந்து 5 கிலோ நகைகள் மீட்கப்பட்டுள்ளன. மதுரை பழங்காநத்தம் - காளவாசல் பைபாஸ் சாலையில் உள்ள நேரு நகர் பகுதியில் தனிஷ்க் ஜூவல்லரியின் புதிய ஷோரூம் செயல்பட்டு வருகிறது. மூன்று தளங்களைக் கொண்ட இந்தக் கடை சில நாட்களுக்கு முன்புதான் திறக்கப்பட்டது. இதன் தரைத்தளம் வாகன நிறுத்துமிடமாகவும், முதல் தளம் தங்க நகைகள் விற்பனைப் பிரிவாகவும் அமைக்கப்பட்டுள்ளது. இரண்டாவது தளத்தில் வைர நகைகள் விற்பனைக்கான ஏற்பாடுகளும், மூன்றாவது தளத்தில் வெள்ளி நகைகள் மற்றும் பொருட்கள் விற்பனைக்கான பணிகளும் நடைபெற்று வந்தன. மேலும், கடையின் சுற்றுப்புறம் மற்றும் வாகன நிறுத்துமிடத்திலும் கட்டுமானப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வந்தன. இதற்காக கடையின் பின்புறத்தில் இரும்புக் கம்பிகளைக் கொண்டு சாரம் அமைக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், கடந்த 12-ம் தேதி காலை சுமார் 9.30 மணியளவில் கடையைத் திறப்பதற்காக ஊழியர்கள் வந்தனர். அப்போது முதல் தளத்தில் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த ஏராளமான நகைகள் காணாமல் போயிருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். நகைகளை வைத்திருந்த பெட்டிகள் காலியாக ஆங்காங்கே சிதறிக் கிடந்தன. இதையடுத்து, ஊழியர்கள் உடனடியாக போலீசாருக்கு தகவல் அளித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் நடத்திய ஆய்வில், சுமார் 15 கிலோ தங்க நகைகளும், பல்வேறு வைர நகைகளும் கொள்ளையடிக்கப்பட்டிருப்பது தெரியவந்தது.

Advertisement
இவற்றின் மொத்த மதிப்பு சுமார் ரூ.21 கோடி என போலீசார் தெரிவித்தனர். தொடர்ந்து, தடயவியல் நிபுணர்கள் கடையில் பதிவாகியிருந்த தடயங்களைச் சேகரித்தனர். மோப்ப நாய்கள் வரவழைக்கப்பட்டும் சோதனை நடத்தப்பட்டது. மதுரை மாநகர காவல் ஆணையர் ராஜேந்திரன் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்து விசாரணையைத் தீவிரப்படுத்தினர். கடையில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராக்களின் பதிவுகளும் ஆய்வு செய்யப்பட்டன. கொள்ளை நடந்த நகைக்கடை மதுரை ரயில் நிலையத்திற்கு அருகில் இருப்பதால், குற்றவாளி ரயில் மூலம் கேரளா அல்லது வடமாநிலங்களுக்குத் தப்பிச் சென்றிருக்கலாம் என போலீசார் சந்தேகித்தனர். இதனால் பல்வேறு ரயில் நிலையங்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டு சோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. கடைக்கு அருகே கட்டுமானப் பணிகள் நடைபெற்று வந்ததால், அங்கு வேலை பார்த்த தொழிலாளர்களுக்கும் கொள்ளைச் சம்பவத்தில் தொடர்பு இருக்கிறதா என்ற கோணத்திலும் விசாரணை நடத்தப்பட்டது. புதிதாகத் திறக்கப்பட்ட இந்த ஷோரூமில் பணியாற்றிய 25 ஊழியர்களிடமும் தனித்தனியாக விசாரணை மேற்கொள்ளப்பட்டது. இதற்காக மூன்று தனிப்படைகள் அமைக்கப்பட்டன. இந்நிலையில், இந்த வழக்கில் தேடப்பட்டு வரும் இளைஞர் நிஷாந்தின் தந்தை சுரேஷ் மற்றும் இன்ஸ்டாகிராம் பிரபலமான மீனாட்சி ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்துள்ளனர். அவர்களிடமிருந்து 5 கிலோ நகைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. கொள்ளையடிக்கப்பட்ட எஞ்சிய நகைகளை மீட்பதற்கான நடவடிக்கைகளில் போலீசார் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.

மதிப்பீடு மற்றும் கருத்துகள்
இந்த செய்தி உங்களுக்கு எவ்வளவு பயனுள்ளதாக இருந்தது?
நடப்பு விலைகள்
🥇 Gold ₹13,140
🥈 Silver ₹205.00
⛽ Petrol ₹107.76
🛢️ Diesel ₹99.55
TNTAM/26/A7738
📰 நிருபர் ஆக
🏠 முகப்பு தமிழ்நாடு அரசியல் இந்தியா உலகம் சினிமா விளையாட்டு தொழில்நுட்பம் ஆன்மீகம் வேலை & கல்வி வணிகம் சுகாதாரம் வீடியோ சிறப்புக் கட்டுரைகள்
🔍 தேடல் ✍️ கட்டுரை எழுது ℹ️ தகவல் மையம்
📰 செய்தி பதிவிடு